Thursday, 20 November 2014

ஒரு சமயம் பக்தர் ஒருவர், காஞ்சி ஸ்ரீமகாபெரியவாளை நமஸ்கரித்து கண்ணீர் பெருக நின்றார். பெரியவா அவரைப் பார்த்து, என்ன ரொம்ப வலிக்கிறதா?” என்று கருணையுடன் கேட்டார். பிறகு, கீழ்க்கண்ட ஸ்லோகத்தை எழுதிக் கொள்ளச் சொல்லி, தினமும் நூற்றி எட்டு தடவை இதைச் சொல், கவலைப்படாதே” என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.
அஸ்மின் ப்ராத்மன் நனுபாத்மா கல்பே
த்வமித்தம் உத்தாபித பத்மயோனி
அநந்தபூமா மம ரோகராசிம்
நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ
- ஸ்ரீமத் நாராயணீயம்
பொருள்: பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீகுருவாயூரப்பா! பாத்ம கல்பத்தில் பிரம்மதேவனைத் தோற்றுவித்தவனும், அளவற்ற மகிமையுடையவனுமான நீ, எனது எல்லா வியாதிகளையும் நீக்கி ஆரோக்கியம் அருள வேண்டும்.
ஆறு மாதங்கள் கழித்து, அந்த பக்தர் மீண்டும் கண்ணீர் மல்க, பெரியவாளை தரிசித்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
நன்னாயிட்டியே” என்றார், அந்தக் கலியுக தெய்வம். அந்த பக்தர், ஆமாம் நன்னாயிட்டேன். மருந்து எதுவும் வேண்டாம் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்” என்றார் அவர்.
அந்த பக்தருக்கு வந்திருந்தது புற்று நோய். பகவானை நம்பி பிரார்த்தித்தால், நிச்சயம் பலனுண்டு என்பதை, இதன் மூலம் மீண்டும் நமக்கு உணர்த்தியிருக்கிறார் மகா பெரியவர்.
நான் இந்த ஸ்லோகத்தை எழுதி, எனக்குத் தெரிந்த யாருக்கேனும் (இப்போதுதான் இந்த நோய் அதிகமாகக் காணப்படுகிறதே) புற்றுநோய் என்று தெரிந்தால், அவர்களுக்குக் கொடுத்து, 
பெரியவா சொன்னதைக் கூறுகிறேன்.
- கலா மூர்த்தி, சென்னை
நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்) நன்றி மகேஷ் .

5 comments:

  1. அஸ்மின் ப்ராத்மன் நனுபாத்மா கல்பே
    த்வமித்தம் உத்தாபித பத்மயோனி
    அநந்தபூமா மம ரோகராசிம்
    நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ
    - ஸ்ரீமத் நாராயணீயம்

    தீராத வியாதிகளையெல்லாம் தீர்க்கும் அருமருந்தே இந்த மந்திரம். நானும் சிலருக்கு இதை எழுதி அனுப்பியுள்ளேன். என் வீட்டிலும் இதனை எழுதி ஆங்காங்கோ ஒட்டி வைத்துள்ளேன்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. ஆங்காங்கோ = ஆங்காங்கே

    ReplyDelete
  3. அஸ்மின் ப்ராத்மன் நனுபாத்மா கல்பே
    த்வமித்தம் உத்தாபித பத்மயோனி
    அநந்தபூமா மம ரோகராசிம்
    நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ
    - ஸ்ரீமத் நாராயணீயம்

    தீராத வியாதிகளையெல்லாம் தீர்க்கும் அருமருந்தே இந்த மந்திரம். நானும் சிலருக்கு இதை எழுதி அனுப்பியுள்ளேன். என் வீட்டிலும் இதனை எழுதி ஆங்காங்கோ ஒட்டி வைத்துள்ளேன்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete