Friday, 11 January 2013

ஒரு மழலையின் யதார்த்தம் :

"என்ன சந்துரு சார் ;முகப்புத்தகத்தில் போட்டதற்கு ஏதாவது பதில் கிடைத்ததா ?"


"அட ஒண்ணுமில்லேப்பா ;எல்லாம் like பண்ணிட்டு போய்ட்டாங்க ;அவ்ளோதான் "

"முகப்புத்தகம்னா அப்படித்தான் இருக்கும்;கவலைப்படாதே"

"அடடே இது யார் ;பேரனா ? செல்லம் உன் பேரன்னே "

"      "

"உனக்கு யார் காத்தாலே பல் தேச்சி விடுவா ?"

"பாத்தி"

"good  யார் பால் கலந்து கொடுப்பா ?" 


"பாத்தி"

"யாரு ஆய் அலம்பி விடுவா ?"



"பாத்தி"


"யாரு உன்னை குளப்பாட்டுவா ?"


"பாத்தி"

"யாரு உன்னை ஸ்கூல் கொண்டு விட்டு அழைசிண்டு

வருவா ?"

"தாத்தா "

"உனக்கு toys எல்லாம் யார் வாங்கி தருவா ?"

"தாத்தா "

"உனக்கு யார் மம்மு ஊட்டுவா ?"


"பாத்தி"

"தூங்கும்போது உனக்கு யார் கதை சொல்லுவா ?"

"பாத்தி"

"good.  உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும் ?"

"எனக்கு ,   ..எனக்கு "

"சொல்லு, சொல்லு "

"அம்மாவை  பிடிக்கும்"

"அப்புறம் ?"

"அப்பாவை  பிடிக்கும்"

"அப்புறம் ?"

"ம் ; ம் ..அவ்ளோதான் வேறே யாரையும் பிடிக்காது ."


--லதிகர் 








3 comments: