Sunday, 6 July 2014

ஆடை விஷயம்…

ஆடை விஷயம்…

Last paragraph shows how much Periyava felt for these changing dress-culture among women. I don’t know what He would have said if He were in physical form in today’s world!!
namavali025
பெண்மையை ரக்ஷிப்பதில் ஒரு முக்யமான அம்சத்தைச் சொல்ல வேண்டும். இது என் மனஸை ரொம்பவும் ஸங்கடப்படுத்தி வருகிற விஷயம். இப்படியொரு விஷயம் நான் வாய்விட்டுச் சொல்லும்படி ஆகியிருப்பதே அவமானமாக இருக்கிறது. ஆனாலும், ஜன ஸமூஹம் கொஞ்சங்கூட ஆக்ஷேபிக்காமல் – ஆக்ஷேபிக்காததோடு ஆதரவு கொடுத்தும் – ஒரு பரம தோஷமான விஷயம் நடக்கிறபோது, அது தோஷமானது என்று எனக்குத் தெரிந்தும், என்னால் முடிந்தது, அதை எடுத்துக்காட்டும் கார்யம்; அதைக் கூட நான் பண்ணவில்லை என்றால் அதுவே மஹா பெரிய தோஷம் என்பதால்தான் சொல்கிறேன்.
நடை, உடை, பாவனை ஆகிய எல்லாவற்றிலும் ஸ்த்ரீகளும் பெளருஷக் கோலம் போட்டுக் கொள்வதில் உடை என்கிற மையமான விஷயைந்தான். ‘ஆள்பாதி, ஆடை பாதி’ என்று வசனம் சொல்கிற அளவுக்கு அது முக்யமான விஷயம்.
பெண் குழந்தைகள் வயஸுக்கு வருகிறதற்கு முந்தியே, பெண்மையின் ஒரு முக்ய அங்கமான லஜ்ஜை (வெட்கம்) என்பதைக் கட்டிக் காப்பாற்றுவதற்காக அவர்களுக்குப் பாவாடைக்கு மேலே சட்டை மட்டுமில்லாமல் தாவணி என்று ஒரு மேலாக்குப் போட்டுக் கொள்ளக் கற்றுக் கொடுத்து அப்படியேதான் தலைமுறை, தலைமுறையாக நடந்து வைந்திருக்கிறது. அப்புறம் இரண்டொரு வருஷத்திலேயே முழுப் புடைவையாக உடுத்துவது வழக்கமாக இருந்து வைந்திருக்கிறது. பெண்மைக்கு ப்ரதானமான லஜ்ஜைக்குப் பரம ரக்ஷையாக இருந்து வந்திருக்கிற அந்த உடைக்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது.
எனக்குத்தான் சொல்ல லஜ்ஜையாக இருக்கிறதே தவிர, அப்படித்தான் பண்ண வேண்டுமென்றே இப்போது ஸ்த்ரீகள் ஆரம்பித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
கொஞ்ச நாள் முன்னாடி என்னைப் பார்க்க இரண்டு காலேஜ் பெண்கள் வந்திருந்தார்கள். பவ்யமாகத்தான் வந்து நமஸ்காரம் பண்ணிவிட்டுப் போனார்கள். ஆனால் அவர்கள் புடைவை கட்டிக் கொள்ளாமல் புருஷர்களின் பைஜாமா-ஜிப்பா மாதிரியே போட்டுக்கொண்டிருந்ததுதான் எனக்கு என்னவோ போல் இருந்தது. N.C.C மாதிரி ஏதாவது பயிற்சி முகாமுக்காக இங்கே (காஞ்சீபுரத்துக்கு) வந்துவிட்டு, அப்படியே அந்த ட்ரெஸ்ஸிலேயே என்னைப் பார்க்க வந்திருப்பார்கள் போலிருக்கிறது என்றுதான் நினைத்தேன். அப்புறந்தான் தெரிந்தது – N.C.C  யும் இல்லை, ஒன்றும் இல்லை; இப்போது இந்த ட்ரெஸ்தான் கல்யாணம் ஆகிற வரையில் இளம் பெண்களின் ட் ரெஸ்ஸாக ஆகிக்கொண்டு வருகிறது என்று, தாவணி வழக்கமும் போய்க் கொண்டிருக்கிறது என்றும் தெரிந்தது, எனக்குப் பெரிய ‘ஷாக்’.
ஏன் ‘ஷாக்’ என்றால், இந்த ஆடை விஷயத்தில் நம்முடைய தேசத்துக்கு என்று
Esayanur Paati Post
ஏற்பட்ட நாகரிக முறையை, ‘ட்ரெடிஷ’னை ஸ்த்ரீகள்தான் இதுவரை விடாமல் காப்பாற்றிக் கொடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.  நாலு தலைமுறைக்கு முன்னாலிருந்தே புருஷர்கள் வெள்ளைக்கார உடுப்புப் போட்டுக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் ஸ்த்ரீகள் அப்படிப் போகவில்லை, ஃபோட்டோக்களில் புருஷன் ஸூட்-கோட் போட்டுக் கொண்டிருந்தபோதிலும், பக்கத்தில் நிற்கிற பெண்டாட்டி கொசுவன் புடவை, அல்லது தங்கள் ஜாதிக்கான புடவைதான் கட்டிக்கொண்டு நிற்பதாகப் பார்த்திருக்கிறேன்.
இப்போது நடக்கிற அளவுக்கு இல்லாவிட்டாலும் ஸ்த்ரீகள் காலேஜ் படிப்பது, உத்யோகம் பார்ப்பது, வேறே பல துறைகளில் ஈடுபடுவது, அன்நிய தேசங்களுக்குப் போய்வருவது ஆகியன எல்லாம் முன்னேயும்தான் இருந்திருக்கிறது. கார் ட்ரைவ் பண்ணுவது, ஸைக்கிள் ஒட்டுவது எல்லாமும் கூட ரொம்ப நாளாகவே – அபூர்வமாகத்தான் என்றாலும் – ஸ்த்ரீகளும் பண்ணிக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள். இப்படிப் பல தினுஸில் வியாபகமாகப் போனாலும் அப்போதும் புடைவை கட்டிக் கொள்கிற பழக்கத்தை விடவில்லை. நர்ஸ்கள்தான் விதிவிலக்கு. அதுவும் ஆஸ்பத்திச் சட்டத்துக்காகவே தவிர அவர்களாகப் ப்ரியப்பட்டுச் செய்ததில்லை.
புருஷர்கள் விஷயம் தேசத்துக்கு ஸ்வதந்தரம் வந்த பிற்பாடு, நாளாக  ஆக, முன்னைவிட வெள்ளைக்கார மோஸ்தரில் போவதாக ஆகிவந்திருக்கிறது. வெள்ளைக்காரன் ஆட்சியில் வேஷ்டி கட்டிக் கொண்டிருந்தவர்கள்கூட, அவனிடமிருந்து விடுதலை பெற்றபின் அவனுடைய ட்ரெஸ்ஸை மாட்டிக்கொள்ள ஆரம்பித்து அப்படியே போய்ப்  போய், வெளி அலுவலின்போது மட்டுமே இங்க்லீஷ் ட்ரெஸ் என்பதுபோய் வீட்டிலுமே கூட அதுதான்; இல்லாவிட்டால் துருக்கன் பாணியில் கைலி-லுங்கி என்று ஆகியிருக்கிறது. இத்தனை பெரிய புராதனமான நாகரிக தேசத்துக்கு, அதற்கென ஒரு தேசிய உடை – National Dress – இல்லாமல், பிறத்தியான் உடுப்பே நமக்கு உடுப்பாயிருப்பது நமக்கு மானக் குறைவு. ஸ்த்ரீகள்தான் இந்த குறைக்கு இடம் தராமல், ஸ்வதந்திரம் வந்து பல வருஷமாகிற மட்டும் பழைய முறையிலேயே உடுத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள். அது பெரிய ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் இருந்தது. இப்போது அதற்கும் உலை வைத்தாகிவிட்டது என்கிறபோதுதான் பெரிய ஷாக்காக அடித்துவிட்டது.
நான் ஸ்வாமிகளானதிலிருந்து எத்தனையோ தடவை ஷாக்கிங் ஸமாசாரங்கள் கேட்டிருக்கிறேன். அந்த எல்லாவற்றையும் சேர்த்து வைத்து இந்த ‘ஷாக்’.
நான் ப்ரமாதமாக தர்மோத்தாரணம் பண்ணுவதாகப் பத்ரிகைகளெல்லாம் எழுதுகின்றன. வருஷா வருஷம் ஜயந்தி என்று அங்கங்கே உத்ஸவம் பண்ணி நான் எப்படி தர்மத்துக்கு மறுமலர்ச்சி உண்டாக்கியிருக்கிறேன் என்று ஸ்தோத்ரிக்கிறார்கள். எனக்கானால் இதெல்லாம் நான் செய்யத் தவறியதைக் குத்திக் காட்டுவதாகவே தோன்றுகிறது. ‘கிழக் கோட்டான் மாதிரி தொண்ணூறாவது ஜயந்தி வரை கொண்டாட்டம் அடிக்கிறாயே! ஜயந்தி கொண்டாடிக் கொள்ள உனக்கு என்ன ‘ரைட்’? மேலே மேலே ஒவ்வொரு வருஷமும் தர்மங்களை வாரி விட்டுக் கொண்டிருக்கிறாயே! நீ பட்டத்துக்கு வந்ததிலிருந்து ஸநாதன தர்மம் மேலும் மேலும் எவ்வளவு பங்கப்பட்டுக் கொண்டு வந்திருக்கிறது? ஜகத்குரு பட்டம் பெரிதாக சூட்டிக் கொண்டிருக்கிற உனக்கு ஜகத்தை தர்மத்தில் நிலை நிறுத்துகிற சக்தி – தபோ சக்தி, பக்தி சக்தி எதுவோ ஒன்று – கொஞ்சமாவது இருந்தால் இப்படி ஆகிக்கொண்டு  வந்திருக்குமா? இருப்பதைக் காப்பாற்றிக் கொடுக்கக்கூடத் துப்பு இல்லாமல் வருஷா வருஷம், நாளுக்கு நாள் தர்மங்களை வாரிக் கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறாய்?’ என்பதை எனக்கு சவுக்கடியாக ஞாபக மூட்டுவதாகத்தான் இந்த ஜயந்தி விழாக்கள், புகழ் மாலைகள் எல்லாம் இருக்கின்றன. (I think only our Periyava in this world would do a self-criticism like this!)
இப்படி நான் கண்ணெதிரில் கொள்ளை கொடுத்த தர்மங்களில் நம்முடைய ஸ்த்ரீகள் புடைவை வேண்டாமென்று தள்ளி, ஆண்பிள்ளை ட்ரெஸ் மாதிரி ஒன்றை மாட்டிக்கொள்ள ஆரம்பித்திருப்பதுதான் பெரிய கொள்ளையாக ‘ஷாக்’ அடித்தது.

Categories: Upanyasam
Tags: penmai

3 comments:

  1. //I think only our Periyava in this world would do a self-criticism like this!)//

    Yes.... Yes..... No doubt in it.

    ReplyDelete
  2. Dear Sir,

    I have written / shared so many articles [108] about His Holiness Maha Swamigal in my Blog from 19th May.2013 to 11th January 2014

    http://gopu1949.blogspot.in/2013/05/blog-post_19.html ....... Starting

    http://gopu1949.blogspot.in/2014/01/108.html ...... Ending.

    This is Just for your information, only, please.

    ReplyDelete