Tuesday, 29 July 2014

வாரியாரின் விளக்கம்

இலக்குவனின் வனவாசமும் வாரியாரின் வடதேச யாத்திரையும்

 .

"ராமனுடன் சீதை வனவாசம் சென்ற மாதிரி இலக்குவனின் மனைவி ஏன் செல்லவில்லை " வாரியார் சுவாமிகளிடம் ஒரு அன்பர் கேட்டார் .அப்போது அவர்களுக்கு இதற்கு விடை கிடைக்கவில்லை


 .

பின்னர் ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் வடதேச யாத்திரைக்கு டிக்கெட் பதிவு செய்தார்.

"உனக்கும் செலவு செய்து நான் அழைத்து போகிறேன் வருகிறாயா ?" தனக்கு பணிவிடைகள் செய்ய ஒரு அன்பரிடம் வினவ அவரும் சம்மதம் தெரிவித்தார்.

"அய்யா, நான் வருவதில் ஒரு சிறிய சிக்கல் " அன்பர் பயணத்திற்கு முதல் நாள் சொல்ல 

"என்ன " சுவாமிகள்

"எனக்கே தெரியாமல் என் மனைவியும் இந்த பயணத்திற்கு பதிவு செய்துள்ளார்"

"அதனால் பரவாயில்லை; நீயும்  வரலாம் "சுவாமிகள்

பிறகுதான் சிக்கலே வந்தது .

ரயில் ஏறியதிலிருந்து கடைசியாக கீழே இறங்கும் வரை அவர் "காபி சாப்பிட்டாயா? மாத்திரை போட்டுண்டயா? இடம் வசதியாய் இருக்கிறதா? நன்னா தூங்கினியா ?" என்று மொத்த பணிவிடையும் மனைவிக்கே செய்ய வேண்டியதாயிற்று.

இப்போது வாரியார் சுவாமிகளுக்கு விடை கிடைத்தது. இலக்குவன்  14 ஆண்டுகள் கண் உறங்காமல் பணிவிடை செய்ய வேண்டி இருந்ததால் உடன் ஊர்மிளையையும் அழைத்து வந்தால் இடையூராக இருக்கும் என்று வனவாசம் வரும்போது அழைத்து வரவில்லை என்று விளக்கம் சொன்னார் .

No comments:

Post a Comment