சதாரா சங்கரா சந்திரசேகரா
இது 1979 - 80 களில் நடந்த இதுவரை வெளிவராத ,செய்தி. அவர் பெயரை 'சு ..' எனறு குறிப்பிடுகின்றேன்
"பெரியவா ,பெல்காமில் இருந்து 'சு ..' உங்களை தரிசிக்க வந்திருக்கிறார் " பெரியவாளிடம் பணிவிடை செய்யும் ஓர் அன்பர் .
" ம் ம்" பெரியவா .
" நீ, அடிக்கடி பெல்காமில் இருந்து வருகிறாயே ,உனக்கு வந்து போக எவ்ளோ சார்ஜ் ஆகும் "பெரியவா .
"நான் ரயில்வேயில் வேலை செய்வதால் எனக்கு பாஸ் இருக்கிறது . ஆகவே free ஆக வந்து போகலாம் ." 'சு ..'
"ஒரு பாஸில் எத்தனை தடவை வந்து போகலாம் ?"பெரியவா .
" அப்படி இல்லை,பெரியவா , ஒரு பாஸ் 4 மாதம் செல்லுபடியாகும் .TTE கை எழுத்து போடலைனா போய் போய் வரலாம் " 'சு ..'
"TTE கை எழுத்து போட மாட்டாளா?" பெரியவா .
எல்லாரும் தெரிந்தவா .அதானாலே போடமாட்டா .Squad TTE வந்தாதான் போடுவா " 'சு ..'
" அப்போ reservation பண்ணா எப்படி?"பெரியவா .
"reservation பண்ணா அந்த journey யோட பாஸ் validity முடிந்து போயிடும். திரும்ப உபயோகம் பண்ண முடியாது ." 'சு ..'
"அப்ப இந்த தப்பை இனிமே நீ பண்ணாதே .நீ அங்கிருந்தே என்னை நினைத்து கொள் " பெரியவா.
ஆஹா என்ன ஒரு janam பெரியவாளுக்கு. ரயில் பற்றியும் பாஸ் பற்றியும் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்.
நான் அப்போது சதாராவில் ரயில்வேயில் booking clerk ஆக இருந்தேன் .
No comments:
Post a Comment