யதார்த்தமான சொந்த பந்தங்கள் :
"சொந்த பந்தங்கள்" என்பதற்கு சரியான விளக்கம் சொல்லுங்க "
" இப்ப உன்கிட்டே இருக்கிற இந்த பேனா யாருக்கு சொந்தம் ? சொல்லு "
"எனக்கு சொந்தம்"
"ரைட் ; நீ அதை வேணுனா வைச்சுக்கலாம் ; இல்லேன்னா தூக்கி தூர போட்டுறலாம் "
"ஆமா "
"அதே போல "சொந்தங்களை" நீ வேணுனா வைச்சுக்கலாம் ; இல்லேன்னா தூக்கி தூர போட்டுறலாம் "
"புரியலை ;ஏதாவது உதாரணம் சொல்லுங்க"
"அம்மா, அப்பா,தாத்தா ,பாட்டி ,மாமா ,மாமி ,மச்சான் இப்படி எவ்வளவோ சொல்லலாம் "
நான் நிமர்ந்து அமர்ந்தேன் . அந்த பூங்காவில் எனது பின்பக்க இருக்கையில் ஒரு முதியவருக்கும் இளைஞருக்கும் நடுவே நடந்த உரையாடல் தான் இது.
"சரி அப்ப "பந்தம் " னா என்ன ?" இளசு
"ஓ இதை அப்படி தூக்கி போட முடியாது "பெருசு .
"உதாரணம் "
"தான் பெற்ற குழந்தைகள் ,தன் பேர குழந்தைகள் இப்படி "
"ஓ அதான் பத்து மாத பந்தம் என்கிறார்களோ "
இப்போது அந்த இளைஞனுக்கு அலைபேசியில் அழைப்பு வர அவன் எழுந்து போனான் .
நான் ஆர்வத்துடன் பெரியவரை அணுகி " உங்களுக்கும் அந்த இளைஞனுக்கும் என்ன உறவு" என்று கேட்டேன் .
"அவனுக்கு நான் சொந்தம் ; எனக்கு அவன் பந்தம் . புரிகிறதா ?" என்றார் .
எனக்கு புரிந்தது.உங்களுக்கு ? புரியலேன்னா ஆரம்பத்திலிருந்து படியுங்கள் .

No comments:
Post a Comment