கைகேயின் ஆணையை சிரமேற்கொண்டு ராமன் வனவாசம் செல்ல ஆயத்தமாகிறான்;
சீதாவுடனும் இலக்குவனோடும் அரண்மனையை விட்டு அவர்கள் ஏறிய ரதம் கிளம்புகிறது. அப்போது தசரதன்
“தேரை திருப்பி அரண்மனைக்கு வா “ என்று
தேரோட்டிக்கு கட்டளை இடுகிறான்.
“அரச கட்டளை ;மீறுவது ராஜத்ரோகம்; ஆகவே அரண்மனைக்கு திரும்பவேண்டும்” ராமனிடம் தேரோட்டி
விண்ணப்பிக்கிறான்.
ஆனால் ராமனோ “தேரை கானகத்தை நோக்கி செலுத்துமாறு”
பணிக்கிறான்.
தேரோட்டி தன்னை ராஜதண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டுகிறான். தாம்
தசரதனுக்கு என்ன பதில் கூறுவது என்றும் வினா எழுப்புகின்றான்.
“கேட்கவில்லை என்று சக்ரவர்த்திக்கு பதிலுரை” ராமன்.
“இது உண்மைக்கு புறம்பு அல்லவா?” தேரோட்டி.
“அவர் சொன்னது உனக்கு கேட்கவில்லை என்று அவர் புரிந்துகொள்ளட்டும்;
உன்னைபொருத்தவரை அவர் சொல்லை நீ “கேட்கவில்லை” ஆகவே
தண்டனையிலிருந்து தப்பலாம் “ ராமன்.
இதை கவனித்த சீதை , உத்தமனாகிய ராமன் பொய் சொல்ல தூண்டியதின் நினைவாக,
தன் புடவையின் நுனியில் ஒரு முடிச்சு போடுகிறாள் .
காட்சி மாறுகிறது. இலங்கையை எரித்த அனுமன்,
திரும்புமுன் சீதையிடம் விடைபெறுகிறான.
அசோக வனத்தில் அனுமன் இருப்பதாக இராவணனுக்கு செய்தி போகிறது.
அவனை தேடி வரும் இராவணன் “ இங்கு வந்த குரங்கு எங்கே?” என்று
சீதையிடம் வினவுகிறான்.
அனுமனை காட்டிகொடுக்க விரும்பாத சீதை விடை தேடி தவிக்கிறாள். அனிச்சையாக அவள் கை புடவை தலைப்பில் இருந்த
முடிச்சில் படுகிறது.
“அந்த குரங்கை நான் முன்பின் பார்த்ததில்லை ; எனக்கு தெரியாது” என்கிறாள் .
சீதை பொய் சொல்லமாட்டாள் என்று விலகி போகிறான் இராவணன். ராமனின் சாதுர்யத்தை நினைத்து
வியந்து புடவை தலைப்பில் இருந்த முடிச்சை அவிழ்க்கிறாள் சீதை..
ஒரு உபன்யாசத்தில் கேட்டது.
No comments:
Post a Comment