Friday, 30 May 2014

இறைவன் உங்களுக்களித்த வரம்

Thanks to Hinduism for sharing this…Thanks to Shri Vrinda for this rare photo…
Periyava_Padha_yatra
ஒரு வங்கி மேலாளர் அவர் தனக்கு என்ன மனக்குறை என்றாலும் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சாரியாரை (மஹா பெரியவர் ) நேரில் சந்தித்துத் தனது குறைகளைக் கொட்டிவிடுவார். அந்த வங்கி மேலாளர் தனது கதையைச் சொன்னார்.
“என் மனத்தில் இருந்த நெடுநாளைய பாரத்தை இறக்க காஞ்சி மடம் சென்றேன். அங்கே என்னைப்போலவே பலரும் தங்கள் மன வேதனையைப் பெரியவரிடம் தெரிவித்து ஆறுதல் மருந்தையும் கவலையிலிருந்து விடுபடு வதற்கான மார்க்கத்தையும் பெற்றுக் கொண்டி ருந்தார்கள். என்னுடைய முறை வந்தது. நான் அவரைப் பார்க்க, அவர் என்னைப் பார்த்தார். அந்த மணித்துளியிலேயே நான் என்னை இழந்துவிட்டேன். வெடித்து அழுதுவிட்டேன். கதறினேன். பக்கத்திலே இருந்தவர்கள் என் கையைப் பிடித்து வெளியேற்றக்கூட முயற்சி செய்தார்கள். ஆனால் பெரியவரோ, அவர் அழுது தீர்க்கட்டும். பாரம் இறங்கும் என்று சொல்லிவிட்டார். நான் அழுதுமுடித்து அமைதி பெற்றேன்.
“இப்போது சொல் உன் துன்பத்தை” என்றார் பெரியவர்.
“எனக்கு இருப்பது இரண்டே குழந்தைகள். இரண்டுமே மூளை வளர்ச்சி குறைந்தவை. இவற்றைப் வளர்க்க நானும் என் மனைவியும் போராடுகிறோம். எங்கள் வாழ்க்கையே நரகமாகிவிட்டது” என்று சொல்லி கதறி அழுதேன்.
மீண்டும் நான் அமைதி அடைந்தபின் பெரியவர் சொன்னார்…… “இந்தக் குழந்தைகள்தான் கடவுளின் குழந்தைகள். இவர்கள் நிச்சயமாக எந்தக் காலத்திலும் எந்தப் பாவமும் செய்யப் போவதில்லை. இத்தகைய குழந்தைகளை எப்படிப்பட்ட பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை இறைவன்தான் தீர்மானிக்கிறான். உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான். இந்தக் குழந்தைகளை வளர்ப்பதற்கு ஒப்பற்ற இதயம் இருக்கவேண்டும். நீ அழுவதில் பயனில்லை. இந்த இரண்டு குழந்தைகளும் இறைவன் உங்களுக்களித்த வரம்’ என்றார்.
அந்த நிமிடத்திலேயே என் பாரம் குறைந்து, கடவுள் தந்த அந்தக் குழந்தைகளைப் பாசத்துடன் வளர்க்க ஆரம்பித்தேன்” என்றார் வங்கி மேலாளரான அந்த நண்பர்.
அவர் சொல்லி முடித்தபோது அவர் கண்களில் மட்டுமல்ல, என் கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது.
As narrated by Shri VTK Balan in a speech recently in an event.
Disclaimer –  I do not know who Shri VTK Balan is.

Categories: Devotee Experiences

No comments:

Post a Comment