Sunday, 3 March 2013

ஒரு அப்பாவியின் யதார்த்தம் :

"சார்  "சமரச சன்மார்க்கம் " அப்படின்னா என்ன? "

"சரி,உங்களுக்கு புரியற மாதிரி சொல்றேன் ;"மார்க்கம்" ன்னா  என்ன ?"

"மார்க்கம்"ன்னா  "வழி "ன்னு சொல்லலாம் "

"நல்லது "சன்" அப்படின்னா என்ன? "

"சூரியன் "

"வேற "

"மகன்" ன்னு சொல்லலாம் "

"அப்ப ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு மகன் சொல்படி கேட்டு அவன் வழியில் போவதைத்தான் "சன்மார்க்கம்"
என்று சொல்கிறோம் ;புரிகிறதா ?"

"கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கு ;சரி  "சமரச சன்மார்க்கம் " அப்படின்னா ?"

"ஓ ! அதுவா , எந்த நிலையிலும் அவனுடன்" சமரசமா " போகணும்; அதுக்குதான் அப்படி சொல்றா ;என்ன புரிந்ததா ?"

"சார்; அவனோட  சமரசமா போறனோ இல்லையோ முதல்லே உங்களோட சமரசமா போய்டுறேன் ;ஆளை விடுங்க "



1 comment: