Sunday, 22 July 2012

அது இந்தியாவின் தமிழகத்தில் ஒரு கிராமம் . ஒரு தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது .மிகப்பெரிய இரண்டு கட்சிகள் போட்டியில் தீவிரம் காட்டின .அ .மு .க .விற்கு பெரிய குரங்கு சின்னமும், இ .மு .க . விற்கு குட்டி குரங்கு சின்னமும் ஒதுக்கப்பட்டிருந்தது .
பதிவு செய்யும் மறைவிடத்திலிருந்து அவசரமாக வெளிப்பட்ட ஒரு மூதாட்டி
"அய்யா நான் குட்டி குரங்கிகிற்கு பதிலாக பெரிய குரங்கிகிற்கு வாக்களித்துவிட்டேன் ;எனக்கு வேறு ஒரு வாக்கு சீட்டு தாருங்கள் "என்று வம்பு பண்ணிக்கொண்டு இருந்தாள் .சாவடி அலுவலர் தரமுடியாது என்று தகராறு செய்தார் . 
"முலாயம் சிங் கேட்டால் தருவீங்க ;எனக்கு தரமாட்டிங்களா ?"மூதாட்டி .
"அந்த வாக்கு செல்லாதுன்னு சொல்லிட்டங்கம்மா "
"பரவாயில்லே எனக்கும் அப்படி சொல்லட்டும் நீ கொடு தம்பி "
இது பரவாயில்லை.மற்றொரு இடத்தில் எலேக்ட்ரோனிக் வோட்டிங் மெசின் வைக்கப்படிருந்த்து .80 வயது முதியவர் ஒருவர் வந்தார் .
"தம்பி ,எனக்கு கை நடுக்கம் அதிகமா இருக்கு.பொத்தான் மேலே சரியாய் விரல் வைக்க முடியலே. நீ வந்து பிடிசிக்கபா "
"களவாணி பயலுக கள்ள வோட்டு போட்ருவனுங்க.என் வோட்டை நீயே போட்ரு தம்பி " மற்றொரு பெருசு.
ஒரு வழியா வாக்குப்பதிவு  முடிந்தது.


வாக்கு எண்ணிக்கை முடிந்து அ .மு .க 6000 வோட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது . பெரிய கொண்டாட்டம் நடந்தது.
திடீரென்று ஒரு அறிவிப்பு ஊடகங்களில் வெளியாயிற்று .தலைமை தேர்தல் அதிகாரி எல்லா தொலைகாட்சிகளிலும் பேட்டி கொடுத்தார் .
"தேர்தல் அலுவகத்தில் ஒரு சின்ன தவறு நடந்து விட்டது. சின்னங்கள் மாற்றி அறிவிக்கப்பட்டு விட்டன ."குட்டி குரங்கு ".அ .மு .க .விற்கும், பெரிய குரங்கு   இ .மு .க . விற்கும் தான் ஒதுக்கப்பட்டுள்ளது .எனவே வாக்கு எண்ணிக்கையின் படி இ .மு .க .6200 வோட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது "
"அதெப்படிங்க கணக்கிலே 200 வோட்டு வித்தியாசம் வருதே "நடுவில் ஒரு பிரபல பத்திரிகை நிருபர் 
"அதுக்கு கோர்ட்டுக்கு போங்க ;இல்லை C .B .I  க்கு போங்க "
பாவம் மக்கள் .செய்வதறியாது முடியை பிடித்து கொண்டனர் 
                                                                                                                        லதிகர்  

Friday, 20 July 2012


"தாயின் மடியில் தலை வைத்திருந்தால்

துயரம் தெரிவதில்லை துயரம் தெரிவதில்லை"

ஆனால் அந்த தாய் மகனின் மடியில் தலை

வைக்க எப்போது ஏங்குகிறாள் தெரியுமா?

தன் உயிர் பிரியும்போது மட்டும்தான்.

...........................................................லதிகர் 


Wednesday, 18 July 2012

சதாரா சங்கரா சந்திரசேகரா  

இது  1979 - 80 களில் நடந்த இதுவரை வெளிவராத ,செய்தி. அவர் பெயரை 'சு ..' எனறு குறிப்பிடுகின்றேன் 
 "பெரியவா ,பெல்காமில் இருந்து  'சு ..' உங்களை தரிசிக்க வந்திருக்கிறார் " பெரியவாளிடம் பணிவிடை  செய்யும் ஓர்  அன்பர் .
" ம் ம்" பெரியவா .
 " நீ, அடிக்கடி பெல்காமில் இருந்து வருகிறாயே ,உனக்கு வந்து போக எவ்ளோ சார்ஜ் ஆகும் "பெரியவா .  
"நான் ரயில்வேயில் வேலை செய்வதால் எனக்கு பாஸ் இருக்கிறது . ஆகவே free ஆக வந்து போகலாம் ." 'சு ..' 
"ஒரு பாஸில் எத்தனை தடவை வந்து போகலாம் ?"பெரியவா .  
" அப்படி இல்லை,பெரியவா , ஒரு பாஸ் 4 மாதம் செல்லுபடியாகும் .TTE  கை எழுத்து  போடலைனா போய் போய் வரலாம் "   'சு ..' 
"TTE   கை எழுத்து  போட மாட்டாளா?" பெரியவா  .
எல்லாரும் தெரிந்தவா .அதானாலே போடமாட்டா .Squad  TTE வந்தாதான்  போடுவா "  'சு ..' 
" அப்போ reservation பண்ணா எப்படி?"பெரியவா .
 "reservation பண்ணா அந்த journey யோட பாஸ் validity முடிந்து போயிடும்.      திரும்ப உபயோகம் பண்ண முடியாது ."    'சு ..' 
"அப்ப இந்த தப்பை இனிமே நீ பண்ணாதே .நீ அங்கிருந்தே என்னை நினைத்து கொள் "  பெரியவா.

ஆஹா என்ன ஒரு janam பெரியவாளுக்கு. ரயில் பற்றியும் பாஸ் பற்றியும் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார். 
நான் அப்போது  சதாராவில் ரயில்வேயில் booking clerk ஆக இருந்தேன் . 










Wednesday, 4 July 2012

Alangudi Radhakalyanam-Ashtapathi by Udayalur Part II-2007

Alangudi Radhakalyanam-Ashtapathi by Udayalur Part II-2007
முதுமையின் யதார்த்தம் 

விரும்பிப்போனால் விலகிப்போகும் -உறவு 
விலகிப்போனால் விட்டது சனியன் என்றிடும் -அவர்களே 
விலக்கிப்போனால் முதியோர் இல்லம் 
பல்கி பெருகிப்போகும்.