முதல் சம்பளம்.
==============
"அப்பா , நாங்க பத்து பன்னிரண்டு பேர் இப்போ பேங்க்லே இருக்கோம் . முதல் சம்பளம் (ஐந்து லக்கம் ) வாங்கியாச்சு . எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்கு பணம் அனுப்பிண்டு இருக்கா . நான் இப்போ உங்களுக்கு எவ்ளோ அனுப்பட்டும் ?"
வருடம் 2003.பிலானியில் படித்து கேம்பஸ் சில் தேர்வாகி ஒரு
நவரத்தினா PSU வில் வேலையில் சேர்ந்த பையன் தொலைபேசியில் கேட்கிறான் .
" நேக்கு ஒண்ணும் வாணாம்பா . நீ அனாவசியமாக
செலவு பண்ண மாட்டாய் . எந்த கெட்ட பழக்கமும்
இல்லை . யாரையும் நம்பி பணத்தை கொடுத்து ஏமாந்துடாதே . பத்திரமா சேத்து வச்சுக்கோ . நாலு பேர் அனுப்பரான்னு நீயும் அனுப்பவேண்டிய அவசியம் இல்லை . இதுதான் நான் சொல்ல ஆசைப்படறேன் .
எனக்கு வோணும்ன்னு தேவை ஏற்பட்டா உன்னை தானே கேப்பேன். "
இதுவரை அப்படி ஒரு தேவை ஏற்படலை .
ஒரு Flashback. ஒரு Paper Adjustment
================================
வருடம் 1973 . ஆரணி (அன்றைய வ.ஆ.மாவட்டம் ) என்ற
ஊரில் வாசம் .படித்து (தண்ட சோறு பட்டத்துடன்) வேலை இல்லாமல் சுற்றி திரிந்த காலம் . எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஐந்து பிள்ளைகள் மூன்று பெண்கள் . அப்பாவும் ஓய்வூதியம் பெறுபவர் .கொஞ்சம் சிரம ஜீவனம்தான் . நாங்கள் குடியிருந்தது பட்டு ஜவுளி வியாபாரம் செய்யும்
ஒரு செட்டியார் வீடு .
"சாமி உங்க பையன் சேகரு உத்தியோகம் கிடைக்கறவரை நம்ம கடையில வேலை செய்யலாமே ? ஏதோ பார்த்து ஒரு சம்பளம் போட்டுக்கலாம் "
"சரி செட்டியார் ஒண்ணாந்தேதிலேந்து வர சொல்றேன் "
அப்பா ஒரு வழியா சொல்லிட்டார் . பட்டு ,சரிகை எல்லாம் எடை போட்டு நெய்பவர்களுக்கு கொடுப்பது ; நெய்துவரும் புடவைகளை எடை போட்டு எடுத்து செய்கூலி சேதாரம் பார்த்து கணக்கெழுதி பணப்பட்டுவாடா செய்வது இத்யாதி வேலைகள் ஒதுக்கப்பட்டன. வேலையில் சேர்ந்த முதல் அய்யர் பையன் . காலை மாலை டீ உண்டு .
அப்பா குடியிருந்த அனைத்து வீடுகளிலும் முதல் தேதி வாடகை கொடுத்து ஒரு சின்ன டைரியில் கையெழுத்து வாங்கி வைத்து கொள்வார் .
முதல் சம்பளம் வாங்க வேண்டும் . அப்பாக்கும் செட்டியார்க்கும் இடையே நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி அடியேனுக்கு தெரியாது . அப்போதுதான் நான் முதன் முதலாக Paper Adjustment பற்றி அறிந்தேன் . என் சம்பளம் ருபாய் 55/- வீட்டு வாடகை ருபாய் 55 /-
நான் டைரியை எடுத்துப்போய் செட்டியாரிடம் கையெழுத்து வாங்க ,அவர் எனக்கு சம்பளம் கொடுத்ததாக ஒரு நோட்டில் கையெழுத்து வாங்கிக்கொள்வார் .
இரண்டும் Paper Adjustment லேயே . மூன்று மாதங்கள் முடிந்த நிலையில் நான் வேலையை ராஜினாமா செய்தேன் .