Tuesday, 29 July 2014

வாரியாரின் விளக்கம்

இலக்குவனின் வனவாசமும் வாரியாரின் வடதேச யாத்திரையும்

 .

"ராமனுடன் சீதை வனவாசம் சென்ற மாதிரி இலக்குவனின் மனைவி ஏன் செல்லவில்லை " வாரியார் சுவாமிகளிடம் ஒரு அன்பர் கேட்டார் .அப்போது அவர்களுக்கு இதற்கு விடை கிடைக்கவில்லை


 .

பின்னர் ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் வடதேச யாத்திரைக்கு டிக்கெட் பதிவு செய்தார்.

"உனக்கும் செலவு செய்து நான் அழைத்து போகிறேன் வருகிறாயா ?" தனக்கு பணிவிடைகள் செய்ய ஒரு அன்பரிடம் வினவ அவரும் சம்மதம் தெரிவித்தார்.

"அய்யா, நான் வருவதில் ஒரு சிறிய சிக்கல் " அன்பர் பயணத்திற்கு முதல் நாள் சொல்ல 

"என்ன " சுவாமிகள்

"எனக்கே தெரியாமல் என் மனைவியும் இந்த பயணத்திற்கு பதிவு செய்துள்ளார்"

"அதனால் பரவாயில்லை; நீயும்  வரலாம் "சுவாமிகள்

பிறகுதான் சிக்கலே வந்தது .

ரயில் ஏறியதிலிருந்து கடைசியாக கீழே இறங்கும் வரை அவர் "காபி சாப்பிட்டாயா? மாத்திரை போட்டுண்டயா? இடம் வசதியாய் இருக்கிறதா? நன்னா தூங்கினியா ?" என்று மொத்த பணிவிடையும் மனைவிக்கே செய்ய வேண்டியதாயிற்று.

இப்போது வாரியார் சுவாமிகளுக்கு விடை கிடைத்தது. இலக்குவன்  14 ஆண்டுகள் கண் உறங்காமல் பணிவிடை செய்ய வேண்டி இருந்ததால் உடன் ஊர்மிளையையும் அழைத்து வந்தால் இடையூராக இருக்கும் என்று வனவாசம் வரும்போது அழைத்து வரவில்லை என்று விளக்கம் சொன்னார் .

Tuesday, 22 July 2014

மகா பெரியவா

மகா பெரியவா

சிவந்த சிவப்பழத் திருமேனி;  பூசிய வெண்ணீறு;  இளம்  சிவப்பேறிய  காவித் துணி,  பாரிஜாத பூச்செண்டு போன்ற பாதாரவிந்தங்கள்.  கல்லிலும், முள்ளிலும், வெயிலிலும், மழையிலும் உலக க்ஷேமத்திற்காகவும்,  கலாச்சாரத்தின் தொன்மையைக் காக்கவும்,  வேத தர்மம் தழைக்கவும் நடமாட வந்ததோ ?
பண்டரிபுரத்தில் பெரியவா தங்கியிருந்த சமயம்.  அருகேயிருந்த சர்க்கரை ஆலையின் அதிகாரி,  பெரியவாளிடம் அவரது பாதாரவிந்தங்கள் தமது ஆலையை ஒரு முறை மிதிக்க வேண்டும் என்று வேண்டி,  அப்பொழுதே வருவதாக இருந்தால்  தமது வண்டியிலேயே அழைத்துப்போய்  வந்து விடுவதாகக் கூறினார்.  பெரியவாள் உடனே சிரித்து விட்டு, “நான் சக்கரம் வைத்த வண்டியில் ஏறுவதில்லை” என்று கூறினார்.   வந்த அதிகாரி மிகவும் ஆச்சர்யப்பட்டு  “இந்த இருபதாம் நூற்றாண்டிலே தாங்கள் இப்படி இருக்க வேண்டுமா ?  வண்டியில் வந்தால் பல மணி நேரம் மிச்சமாகுமே,  அதிகமான இடங்களைக் காண வாய்ப்புக் கிடைக்குமே” என்றார்.
பெரியவாள்,  “நான் பதிமூன்று வயதில் பட்டத்திற்கு வந்த உடனே சக்கரம் வைத்த வண்டியில் ஏறுவதில்லை என்று சங்கற்பித்துக்  கொண்டேன்.  ஒரு முறை நான் ஒரு ஊருக்குச் சென்று கொண்டிருந்தேன்.  மழையே இல்லாமல் இருந்த அந்த ஊரில் என்னவோ தெரியவில்லை,  நல்ல மழை பிடித்துக் கொண்டது.   போகும் வழியில் இருபுறமும்  பள்ளமாகவும் நடுவே சற்று மேடாகவும் இருந்ததால்,  ஓடும் நீரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்நிலத்திலிருந்த  ஜீவராசிகள் பலவும் மேட்டுக்கு வந்து விட்டன.  அப்பொழுது சாலையில் சென்ற பல வாகனங்களால் அவற்றிற்கு அழிவு ஏற்பட்டது.  அன்றே நான் சக்கரம் வைத்த வண்டியில் ஏறி ஜீவ ஹிம்சைக்குக் காரணமாகக் கூடாது என்று மீண்டும் சங்கல்பித்துக்    கொண்டேன் .
இன்னொரு காரணமும் உண்டு.
வண்டியில் போவதால் பல ஊர்களைக் காண இயலாது போய் விடும்.   வாஹனத்தில் திடீரென்று ஓர் ஊருக்குப் போய் இறங்கினால் அங்குள்ளவர்களுக்குச் சிரமம்.  நடந்து போவதால் போகும் இடத்திலுள்ள மக்கள் அடுத்த ஊருக்கு முன்பே தெரியப்படுத்தி    வசதி செய்து தருகின்றார்கள் இல்லையா ?” என்ற வினா எழுப்பிச் சுற்றி நின்றவர்களைப் பார்த்து தமது அருளைப்  புன்னகையோடு குழைத்து அளித்தார்.
வாருங்கள்.  பாரதம் வலம் வந்த பாதமலர்களுக்கு பூஜைகள் செய்திடுவோம்!
மஹா பெரியவா அருள்வாக்கு : -
நல்லதும் கெட்டதுமாகப் பலது நம்மை பாதிக்கிறது. அதனால் அழுகிறோம், சிரிக்கிறோம். இரண்டும் பாதிப்புதான். இரண்டுமே போதும் போலத்தான் இருக்கிறது. சிரித்தால்கூட ஒரு அளவுக்கு மேலே போனால் வயிற்றை வலிக்கிறது! பலஹீனமாகிறது. சிரிப்பு மூட்டாதே!” என்று கோபித்துக் கொள்கிறோம். ஆனந்தமாக டான்ஸ் பண்ணினாலும் உடம்பு அசந்து போகிறது. போதும் என்றாகிவிடுகிறது. ஒரு பாதிப்பும் இல்லாமல் விச்ராந்தியாக இருக்க மாட்டோமோ என்றுதான் இருக்கிறது. இதுதான் நமக்கு வேண்டியது. அத்வைதமுமில்லை, த்வைதமும் இல்லை.
இதற்கு என்ன பண்ணலாம் என்று பார்க்கிறோம். பாதிப்பு எப்படிப் போகும் என்று ஆலோசித்துப் பார்த்தால் ஒன்று தெரிகிறது. ‘முதலிலே காங்கோ யுத்தம் பற்றிய நியூஸ் வந்தபோது விழுந்து விழுந்து படித்தோமே, அப்புறம் ஏன் விட்டுப் போச்சு? அது ஏன் இப்போது நம்மை பாதிக்கவில்லை’ என்று ஆலோசித்தால், இடத்தில் (space-ல்) ஒன்று தள்ளிப் போகப் போக அதன் பாதிப்பு குறைகிறதென்று தெரிகிறது. பத்து வருஷம் முந்தி பிதா காலமானபோது அத்தனை அழுத நம்மை இப்போது அது ஏன் பாதிக்கவில்லை என்று யோசித்துப் பார்த்தால், காலத்திலே தள்ளிப் போகப் போக, பாதிப்பு குறைகிறது என்று தெரிகிறது. அதனால் நாம் பாதிப்பே இல்லாமலிருக்க வேண்டுமானால் பக்கத்திலேயே நடப்பதை காங்கோவில் நடக்கிற மாதிரி பாவிக்கப் பழக வேண்டும்; இந்த க்ஷணத்தில் வருகிற நல்லது பொல்லாததுகளைப் பத்து வருஷத்துக்கு முந்தி நடந்த மாதிரிப் பார்க்க அப்யாஸம் செய்ய வேண்டும்.
எத்தனை ஸந்தோஷமும், துக்கமும் சாச்வதமாக இல்லாததால், எல்லாம் relative-தான் (ஸ்வய சக்தி இல்லாமல், இன்னொன்றைச் சார்ந்திருப்பதுதான்) என்று தெரிந்துவிட்டது. அதனால் இன்னொன்றைச் சாராமல் தன்னில் தானாக நிறைந்துAbsolute- ஆக இருப்பதைப் பிடித்தால்தான் பல தினுஸான பாதிப்பு இல்லாமல் சாச்வத அமைதியாக இருக்கும் என்று தெரிகிறது. இதுதான் spirituality-யில் (ஆத்மிகத்தில்) ஐன்ஸ்டீனின் Relativity Theory (சார்புக் கொள்கை)! அவரும்Time, Space-ஐத்தானே சொல்கிறார்?
Thanks Balhanuman

Sunday, 6 July 2014

Maha Periyava

The story of retrieving Sita that happened in Maha Periyava's life

சீதையை மீட்டாச்சு...
மீண்டது சிறுவன் குரல்! பல வருடங்களுக்கு முன்... ஒரு நாள் மாலை வேளை. காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் மகா ஸ்வாமிகளை தரிசிக்க ஏகக்கூட்டம். தனது அறையை விட்டு வெளியே வந்த ஸ்வாமிகள், காத்திருக்கும் பக்தர் கூட்டத்தைச் சற்று நின்று உற்றுப் பார்த்துவிட்டுச் சுவரில் சாய்ந்து அமர்ந்துகொண்டார். ஒவ்வொருவராக வந்து நஸ்கரித்து, தங்கள் குறைகளை ஸ்வாமிகளிடம் தெரிவித்து, பரிகாரம் பெற்றுக்கொண்டு நகர்ந்தனர். பக்தர்கள் வரிசையில் சிறுவன் ஒருவனின் கையை இறுகப் பற்றியபடி நின்றிருந்தார், நடுத்தர வயது மனிதர் ஒருவர். அவர் கண்களிலிருந்து தாரையாக நீர் வழிந்தது. சிறுவன் பேந்தப்பேந்த விழித்தபடி எந்தச் சலனமுமின்றி நின்றிருந்தான்.
பெரியவாளுக்கு முன் வந்து நின்ற அவர், சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார். சிறுவனும் நமஸ்கரித்தான். கண்களை இடுக்கிக்கொண்டு அவரைக் கூர்ந்து பார்த்த மகா ஸ்வாமிகள், "ஏண்டாப்பா, நீ மயிலாப்பூர் ஆடிட்டர் சங்கரநாராயணன் தானே? ஏன் இப்படிக் கண் கலங்கிண்டு நிக்கிறே? என்ன சிரமம் ஒனக்கு?" என்று ஆதரவுடன் விசாரித்தார்.
பெரியவா கேட்டதும் துக்கம் மேலும் அதிகரித்துவிட்டது அவருக்கு. கேவிக்கேவி அழுதுகொண்டே, "ஆமா பெரியவா, இப்ப எனக்குத் தாங்க முடியாத சிரமம் ஒண்ணு ஏற்பட்ருக்கு, என்ன பண்றதுன்னே தெரியலே. நீங்கதான் என் தெய்வம், எப்படியாவது நிவர்த்தி பண்ணிக் கொடுக்கணும். வேற கதியில்லே!" என்று மீண்டும் பெரியவர் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்.
நிலைமையை உணர்ந்த பெரியவா, வாத்ஸல்யத்தோடு, "சங்கரா... ஒண்ணும் தாபப்படாதே! சித்த நீ அப்டி ஒக்காந்துக்கோ.. இவாள்ளாம் பேசிட்டுப் போனப்றம் ஒன்னக் கூப்டறேன்!" என்று எதிரில் கை காண்பித்தார்.
"உத்தரவு பெரியவா.. அப்டியே பண்றேன்!" என்று கூறிவிட்டுச் சற்றுத் தள்ளி எதிரில் அமர்ந்தார் ஆடிட்டர். சுமார் அரைமணி நேரம், கழித்து பக்தர்கள் ஆச்சார்யாளை தரிசித்துவிட்டுக் கிளம்பினார்கள். ஸ்வாமிகளுக்குப் பணிவிடை செய்கிற இரு இளைஞர்கள் தவிர, அங்கு வேறு எவரும் இல்லை. ஆடிட்டர் சங்கரநாராயணனை ஜாடை காட்டி அழைத்தார் ஸ்வாமிகள். வந்து நமஸ்கரித்தார் ஆடிட்டர். ஆச்சார்யாள் வாஞ்சையோடு ஆடிட்டரைப் பார்த்து "சங்கரா...பிராக்டீஸெல்லாம் நடந்துண்டிருக்கோல்லியோ?"
நீதான் 'லீடிங்' ஆடிட்டராச்சே... பிராக்டீஸுக்குக் கேப்பானேன்? அது சரி, ஒன் தகப்பனார் பஞ்சாபகேச ஐயர் தஞ்சாவூர்லதானே இருக்கார்? சௌக்யமா இருக்காரோல்லியோ?" என்று கேட்டார்.
உடனே ஆடிட்டர் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, "பிராக்டீஸெல்லாம் ரொம்ப நன்னா நடக்கிறது பெரியவா, அப்பாவும், அம்மாவும் பம்பாய்ல இருக்கிற என் தம்பிகிட்ட போயிருக்கா. ரெண்டு மாசமாறது. எனக்குத்தான் ஒரு துக்கம் ஏற்பட்டுடுத்து பெரியவா. அதத் தாங்க முடியலே..நீங்கதான் நிவர்த்தி பண்ணிக் குடுக்கணும்" என்று கூறியபடி அருகில் இருந்த சிறுவனைக் கட்டியணைத்துக் கதறி அழ ஆரம்பித்தார்.
சிறுவன் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு துக்கம் ஆடிட்டர் சங்கரநாராயணனின் மனதை மிகவும் பாதித்திருக்கிறது என்று நொடிப் பொழுதில் புரிந்துகொண்டது அந்த நடமாடும் தெய்வம்.
"அழப்படாது சங்கரா.. எதுவா இருந்தாலும் புருஷா கண் கலங்கப்படாது! அது சரி... இந்தப் புள்ளையாண்டான் யாரு? ஒம் புத்ரனா?" எனக் கேட்டார் ஸ்வாமிகள். "ஆமாம் பெரியவா, இவன் என் பையன்தான். பேரு சந்திரமௌளி. இவனுக்குத்தான் பெரியவா திடீர்னு.." என்று மேலே பேச முடியாமல் துக்கம் தொண்டை அடைக்க நின்றார் சங்கரநாராயணன்.
உடனே ஆச்சார்யாள் கவலை தோய்ந்த முகத்தோடு, "சங்கரா! இவனுக்கு திடீர்னு என்னாச்சு? சந்திரமௌலி ஸ்கூல்ல படிச்சுண்ருக்கானோல்லியோ... பதட்டப்படாம விவரமா சொல்லேன்!" என ஆறுதலாகச் சொன்னார்.
சங்கர நாராயணன் கண்களைத் துடைத்தபடி, "பெரியவா..பையன் சந்திரமௌலி மயிலாப்பூர் பி.எஸ். ஹைஸ்கூல்ல ஏழாவது படிச்சுண்டிருக்கான். பன்னண்டு வயசாறது. படிப்புல கெட்டிக்காரன்.
கிளாஸ்ல இவன்தான் ஃபர்ஸ்ட். இருவது நாளக்கி முன்னால் ஒரு நாள் கார்த்தாலேர்ந்து பேச்சு நின்னுடுத்து பெரியவா. கேட்டா, 'பேச முடியலே"னு ஜாடை காட்றான்... அன்னிலேர்ந்து ஸ்கூலுக்குப் போகலே. சாப்பாடு, டிபனெல்லாம் வழக்கம்போல சாப்டறான்...நன்னா தூங்கறான். அதெல்லாம் சரியா இருக்கு பெரியவா... ஆனா பேச்சுதான் வரல்லே... நா என்ன பண்ணுவேன்.. நீங்கதான் கிருபை பண்ணி,இவனைப் பேச வைக்கணும்!" என்று கண்ணில் நீர் வழியப் பிரார்த்தித்தார்.
ஸ்வாமிகள் சற்று நேரம் மௌனம் காத்தார். பிறகு ஆடிட்டரிடம், "பையனை அழச்சிண்டு கோயில் குளத்துக்கு எல்லாம் போறது உண்டா? சந்திரமௌலிக்கு ஸ்வாமிகிட்டே பக்தி உண்டோல்லியோ?"
"நிறைய உண்டு பெரியவா. கந்த சஷ்டி கவசம். ஆஞ்சநேயர், ராமர் ஸ்லோகங்களை எல்லாம் நித்யம் கார்த்தால குளிச்சுப்டு, ஸ்வாமி படத்துக்கு முன்னாடி நின்னு சொல்லிட்டுத்தான் ஸ்கூலுக்குக் கெளம்புவான். ஆத்ல [வீட்டில்] பெரிய கோதண்ட ராமர் படம் ஒண்ணு உண்டு.
எங்க தாத்தா காலத்து தஞ்சாவூர் படம் அது. நித்யம் காலம்பற - சாயங்காலம் அத நமஸ்காரம் பண்ணிப்டு சீதா ராமன் திருவடிகளை நிறைய வாட்டி தொட்டுக் கண்ணுல ஒத்திணடே இருப்பான். "சீதையையும், ராமனையும் எனக்கு ரொம்பவும் புடிக்கும்னு அடிக்கடி சொல்லிண்டிருப்பான். வாரத்ல ரெண்டு மூணு நாள் அவன் அம்மாவோட கபாலீஸ்வரர், முண்டகக் கண்ணி அம்மன், லஸ் ஆஞ்சநேயர் கோயிலுக்கெல்லாம் போய் தரிசனம் பண்ணுவான். அப்படிப்பட்ட நல்ல கொழந்தைக்கு இப்டி ஆயிடுத்தே பெரியவா..." சங்கரநாராயணனால் துக்கத்தை அடக்க முடியவில்லை.
மீண்டும் கேவிக்கேவி அழ ஆரம்பித்தார்.
அவரை சமாதானப்படுத்திய ஆச்சார்யாள், சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்துவிட்டுக் கேட்டார். "மயிலாப்பூரில் நடக்கிற உபன்யாசத்துக்கெல்லாம் இவனை அழச்சிண்டு போற வழக்கமுண்டோ?"
"உண்டு பெரியவா! சில நேரம் நா அழச்சிண்டு போவேன். இவனுக்குப் பேச்சு நின்னு போனன்னிக்கு மொத நாள் சாயங்காலம்கூட நான்தான் இவனை ரசிகரஞ்சனி சபாவுல நடந்த ராமாயண உபன்யாசத்துக்கு அழச்சிண்டு போயிருந்தேன். சிரத்தையாகக் கேட்டான். மறுநாள் இப்டி ஆயிடுத்து!"
சிரித்துக்கொண்டே, "ராமாயணம் கேட்டதினாலேதான் இப்டி ஆயிடுத்துனு சொல்ல வர்றியா?" என்று கேட்டார் ஆச்சார்யாள்.
"ராம ராம! அப்டி இல்லே பெரியவா! அதுக்கு அடுத்த நாள்லேர்ந்துங்கிறதுக்காகச் சொல்ல வந்தேன்!" எனக் கன்னத்தில் போட்டு்க்கொண்டார் ஆடிட்டர். "அது சரி, உபன்யாசம் பண்ணினது யாரோ" என வினவினார் பெரியவா.
"ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மா, பெரியவா!"
""பேஷ் பேஷ், சோமதேவ சர்மாவோட புத்ரன்.நல்ல பரம்பரை. ரொம்ப வாசிச்சவா.. அது போகட்டும் சங்கரா, பையனை யாராவது டாக்டர்கிட்ட காமிச்சியோ?"
"காமிச்சேன் பெரியவா!"
"எந்த டாக்டர்?"
"டாக்டர் சஞ்சீவி!"
"அவர் என்ன சொல்றார்?" - பெரியவா
"டெஸ்ட்டெல்லாம் பண்ணிப்டு, 'குரல்வளைல ரெண்டு நரம்பு பாதிக்கப்பட்ருக்கு. ஒரு ஆபரேஷன் பண்ணினா சரியாயிடலாம்'னு சொன்னார் பெரியவா."
"நிச்சயமா சரியாயிடும்னு சொல்லலியா?"
"அப்டி உறுதியா சொல்லலே பெரியவா.. எப்படியாவது நீங்கதான் இவனுக்குத் திருப்பியும் பேச்சு வரும்படி பண்ணணும். நீங்கதான் காப்பாத்தணும்.!"
சற்று நேர மௌனத்துக்குப் பிறகு பேசினார் ஆச்சார்யாள். "நீ ஒரு காரியம் பண்ணு சங்கரா. பையன் சந்திரமௌலிய அழச்சிண்டு இந்த ஊர்ல இருக்கிற கோயில்களுக்கு எல்லாம் போய் தரிசனம் பண்ணி பிரார்த்தனை பண்ணிண்டு வா, ராத்ரி மடத்திலேயே பலகாரம் பண்ணிப்டு தங்கிடு. கார்த்தால ஸ்னானம் பண்ணி, அனுஷ்டானம் இருந்தா அதயெல்லாம் முடிச்சிண்டு பத்து மணிக்கு வந்து என்னைப் பாரு!"
ஆச்சார்யாள் சொன்ன வார்த்தைகள் மிகவும் ஆறுதலாக இருந்தன சங்கரநாராயணனுக்கு! பெரியவாளை நமஸ்கரித்துவிட்டு இருவரும் ஆலய தரிசனத்து்க்குப் புறப்பட்டனர்.
அடுத்த நாள் காலை பத்து மணி, முன்னதாகேவே வந்து அமர்ந்திருந்தது அந்த நடமாடும் தெய்வம். அதிகக் கூட்டமில்லை. ஐந்தாறு பேர் காத்திருந்தனர். அனைவரும் தரிசித்துச் சென்றனர். ஆச்சார்யாளை நமஸ்கரித்து, கை கட்டி நின்றார் சங்கரநாராயணன்.
சந்திரமௌலியும் நமஸ்கரித்து எழுந்தான். ஸ்வாமிகள் அவனையே உற்றுப் பார்த்துவிட்டுப் பேசினார். "சங்கரா.. ஒரு கார்யம் பண்ணு, சந்திரமௌலியையும் அழச்சிண்டு போய், மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில்ல ஸ்வாமி அம்பாளுக்கு ஒரு பூர்ணாபிஷேகம் பண்ணி, அத தரிசனம் பண்ணி வை. அப்புறமா நீ என்ன பண்றே.. அதே ஸ்ரீவத்ஸ ஜயராம சர்மா வேறு எங்கயாவது பூர்த்தியா ஸ்ரீமத் ராமாயணம் சொல்றாரானு பாரு.. அப்டி எங்கயாவது கோயில்லயோ,சபாவிலயோ சொல்றார்னா.. நீ ஒரு கார்யம் பண்ணு. சுந்தர கண்டத்லேர்ந்து ஸ்ரீசீதாராம பட்டாபிஷேக வைபவம் வரைக்கும் சந்திரமௌலிய கூட அழச்சிண்டு போய் 'ஸ்ரவணம்'' [கேட்டல்] பண்ணவை! ஸ்ரீசீதாராம பட்டாபிஷேக பூர்த்தி அன்னிக்கு, நீ என்ன பண்றே... நல்ல மலை வாழைப்பழமா பாத்து வாங்கிண்டு போய் 'பௌராணிகர் [உபன்யாசகர்] கைல கொடுத்து ரெண்டு பேருமா அவர சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுங்கோ. நீ மனசுக்குள்ள அந்தப் பட்டாபிஷேக ஸ்ரீ சீதாராமனையும், பௌராணிகரையும் பிரார்த்தனை பண்ணிக்கோ....
அந்தப் பட்டாபிராமன் காப்பாத்துவான். கவலையே படாதே.. போயிட்டு வா!" என்று இருவருக்கும் பிரசாதம் கொடுக்கச் சொல்லி, உத்தரவு கொடுத்து அனுப்பி வைத்தது அந்த பரப்பிரம்மம்.
'சென்னையில் எங்கேயாவது ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மாவின் ஸ்ரீமத் ராமாயண பிரசவனம் நடைபெறுகிறதா' என்று தினமும் நாளிதழ்களின் "இன்றைய நிகழ்ச்சிகள்" பகுதியைப் பார்த்துவந்தார் ஆடிட்டர்.
அன்றைய பேப்பரில், "மயிலை ஸ்ரீஷீர்டி சாய்பாபா கோயிலில் ஸ்ரீஜயராம சர்மாவின் ஸ்ரீமத் ராமாயண உபன்யாசம் 'நவாஹ'மாக [9 நாட்கள்] நடைபெறும்' என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருந்தது.
அன்று சுந்தர காண்டம் பகுதி ஆரம்பம். சந்திரமௌலியுடன் ஸ்ரீசாய்பாபா கோயிலுக்குப் போனார் சங்கரநாராயணன். மிக உருக்கமான உபன்யாசம். மெய்ம்மறந்து கேட்டான் சந்திரமௌலி. சில நேரம் அவன் கண்ணிலிருந்து நீர் பெருகியது. அப்போதெல்லாம் அவன் முதுகில் தடவிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தினார் சங்கர நாராயணன்.
அன்று ஸ்ரீமத் ராமாயண உபன்யாச பூர்த்தி தினம். மயிலை சாய்பாபா கோயிலில் நல்ல கூட்டம். இரவு 10.30 மணிக்கு ஸ்ரீசீதாராம பட்டாபிஷேகம் பூர்த்தியாகி, ராமாயணம் கேட்டால் உண்டாகும் பலன்களைச் சொல்லி முடித்தார் ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மா.
ஒவ்வொருவராக அவரை நமஸ்கரித்து நகர்ந்தனர். சங்கரநாராயணனும் சந்திரமௌலியும் அவரை நமஸ்கரித்தனர். தான் வாங்கிச் சென்றிருந்த ஒரு டஜன் பெரிய மலை வாழைப்பழச் சீப்பை சந்திரமௌலியிடம் கொடுத்து, ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மாவிடம் சமர்ப்பித்து நமஸ்கரிக்குமாறு சொன்னார். அவன் அப்படியே செய்தான். சந்தோஷத்துடன் பழச் சீப்பை வாங்கிய அவர், தனக்குப் பின்புறமிருந்த ஸ்ரீராம பட்டாபிஷேக திருவுருவப் படத்துக்கும், ஷீர்டி ஸ்ரீசாய்பாபா படத்துக்கும் அதைக் காட்டி அர்ப்பணித்தார். பிறகு அதிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்து, சந்திரமௌலியிடம் கொடுத்து, "கொழந்தே.... நீ க்ஷேமமா இருப்பே. இந்த ரெண்டு பழத்தையும் நீயே சாப்டு!" என்று கூறி ஆசிர்வதித்தார்.
கோயிலை விட்டு வெளியே வந்ததும், அந்த இரு பழங்களையும் சாப்பிட்டான் சந்திரமௌலி.
அடுத்த நாள் காலையில் ஒற் அதிசயம் நிகழ்ந்தது. குளியலறையில் பல் துலக்கிவிட்டு, ஹாலுக்கு வந்த சந்திரமௌலி, "அம்மா, காபி ரெடியா?" என்று உரக்கக் குரல் கொடுத்தான். பேப்பர் படித்துக்கொண்டிருந்த அவன் அப்பாவும் சமையலறையில் இருந்த அம்மாவும் தூக்கிவாரிப் போட்டபடி ஹாலுக்கு ஓடோடி வந்தனர்.அங்கு சிரித்தபடி நின்றிருந்தான் சந்திரமௌலி.
"காபி ரெடியானு நீயாட குரல் குடுத்தே சந்திரமௌலி!" என்று ஆனந்தம் பொங்க அவனைக் கட்டியணைத்து முத்தமிட்டாள் அம்மா. சங்கரநாராயணன் அவனைத் தோளில் தூக்கி வைத்துக் கூத்தாடினார். சந்திரமௌலி சரளமாகப் பழையபடி பேச ஆரம்பித்தான். தெரிந்தவர்கள் அத்தனை பேரும் வந்து பார்த்து, சந்தோஷப்பட்டனர்.
அன்று மாலை 5-30 மணி, காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தில் மகா ஸ்வாமிகள் ஏகாந்தமாக உட்கார்ந்திருந்தார். கூட்டம் அவ்வளவாக இல்லை. பத்து அல்லது பதினைந்து பேருடன் வேன் ஒன்றில் வந்தார் ஆடிட்டர் சங்கரநாராயணன். சந்திரமௌலியுடன் ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தார் ஆடிட்டர். சிரித்தபடியே ஆச்சார்யாள் கேட்ட முதல் கேள்வி; "சந்திரமௌலீ..இப்போ நன்னா பேச வந்துடுத்தோல்லியோ? பேஷ்... பேஷ்! எல்லாம் அந்த சீதாராமனோட கிருபை!"
உடனே சந்திரமௌலி, "ஹரஹர சங்கர... ஜெய ஜெய சங்கர.. காமகோடி சங்கர...." என்று உரக்க கோஷமிட்டான்.அனைவரும் மெய்ம்மறந்து நின்றிருந்தனர். சற்று நேரத்துக்குப் பிறகு அந்த பரப்பிரம்மம் பேசியது;
"சங்கரா.. இப்போ சொல்றேன், கேளு. சந்திரமௌலிக்கு இப்டி திடீர்னு ஏற்பட்டதுக்கு வேற ஒண்ணும் காரணமில்லே. அவனுக்கு இயற்கையாகவே சீதாதேவி கிட்டேயும், ஸ்ரீராமனிடமும் அளவு கடந்த பிரியமும், பக்தியும் இருந்திருக்கு. அவாளுக்கு ஒரு சிரமம்னா அத இவனால தாங்கிக்க முடியாது! மொதல்ல உபன்யாசத்த இவன் கேக்கற அன்னிக்கு ஜயராம சர்மா, சீதாபிராட்டியை ராவணன் அபகரிச்சுண்டு போர 'கட்ட'த்த சொல்லியிருக்கணும். நா சொல்றது சர்தானா [சரிதானா] சங்கரா...?"
பிரமித்து நின்ற ஆடிட்டர் வாய் திறந்து, "அதேதான் பெரியவா... அதேதான்! அன்னிக்கு அந்த கட்டத்தைத்தான் ரொம்ப உருக்கமா சொன்னார்!" என ஆமோதித்தார். ஸ்வாமிகள் தொடர்ந்தார்; "நாம அளவு கடந்த பக்தியும், ஆசையும் வெச்சுண்டிருக்கிற மாதா சீதைய ஒரு ராட்சசன் தூக்கிண்டு போறான்கறதக் கேட்ட ஒடனே இவனுக்கு உள்ளூர பிரமை புடிச்சு ஸ்தம்பிச்ச நெலமை ஏற்பட்டுடுத்து. பேச்சும் ஸ்தம்பிச்சுடுத்து. வேற ஒண்ணுமில்லே.
இதுக்கு ஒரே நிவர்த்தி மார்க்கம் என்ன? அதே பௌராணிகர் வாக்காலயே "அம்மா சீதைக்கு ஒரு சிரமும் இல்லாம திரும்பவும் மீட்டுண்டு வந்தாச்சு"ங்கறத இவன் காதால கேட்டுட்டா மனசையும், வாக்கையும் அமுத்திண்டிருக்கிற அந்தப் பிரமை விட்டுப் போயிடும்னு தோணித்து, அதனால்தான் அப்டி பண்ணச் சொன்னேன். சீதாராமன் கிருபையால எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. சந்திரமௌலி... நீ பரம க்ஷேமமா இருப்பே!"
அந்த நடமாடும் தெய்வத்தின் பேச்சைக் கேட்ட அனைவரும் மலைத்து நின்றனர்.

Thanks Sundar Iyer in Mazhalaigal

ஆடை விஷயம்…

ஆடை விஷயம்…

Last paragraph shows how much Periyava felt for these changing dress-culture among women. I don’t know what He would have said if He were in physical form in today’s world!!
namavali025
பெண்மையை ரக்ஷிப்பதில் ஒரு முக்யமான அம்சத்தைச் சொல்ல வேண்டும். இது என் மனஸை ரொம்பவும் ஸங்கடப்படுத்தி வருகிற விஷயம். இப்படியொரு விஷயம் நான் வாய்விட்டுச் சொல்லும்படி ஆகியிருப்பதே அவமானமாக இருக்கிறது. ஆனாலும், ஜன ஸமூஹம் கொஞ்சங்கூட ஆக்ஷேபிக்காமல் – ஆக்ஷேபிக்காததோடு ஆதரவு கொடுத்தும் – ஒரு பரம தோஷமான விஷயம் நடக்கிறபோது, அது தோஷமானது என்று எனக்குத் தெரிந்தும், என்னால் முடிந்தது, அதை எடுத்துக்காட்டும் கார்யம்; அதைக் கூட நான் பண்ணவில்லை என்றால் அதுவே மஹா பெரிய தோஷம் என்பதால்தான் சொல்கிறேன்.
நடை, உடை, பாவனை ஆகிய எல்லாவற்றிலும் ஸ்த்ரீகளும் பெளருஷக் கோலம் போட்டுக் கொள்வதில் உடை என்கிற மையமான விஷயைந்தான். ‘ஆள்பாதி, ஆடை பாதி’ என்று வசனம் சொல்கிற அளவுக்கு அது முக்யமான விஷயம்.
பெண் குழந்தைகள் வயஸுக்கு வருகிறதற்கு முந்தியே, பெண்மையின் ஒரு முக்ய அங்கமான லஜ்ஜை (வெட்கம்) என்பதைக் கட்டிக் காப்பாற்றுவதற்காக அவர்களுக்குப் பாவாடைக்கு மேலே சட்டை மட்டுமில்லாமல் தாவணி என்று ஒரு மேலாக்குப் போட்டுக் கொள்ளக் கற்றுக் கொடுத்து அப்படியேதான் தலைமுறை, தலைமுறையாக நடந்து வைந்திருக்கிறது. அப்புறம் இரண்டொரு வருஷத்திலேயே முழுப் புடைவையாக உடுத்துவது வழக்கமாக இருந்து வைந்திருக்கிறது. பெண்மைக்கு ப்ரதானமான லஜ்ஜைக்குப் பரம ரக்ஷையாக இருந்து வந்திருக்கிற அந்த உடைக்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது.
எனக்குத்தான் சொல்ல லஜ்ஜையாக இருக்கிறதே தவிர, அப்படித்தான் பண்ண வேண்டுமென்றே இப்போது ஸ்த்ரீகள் ஆரம்பித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
கொஞ்ச நாள் முன்னாடி என்னைப் பார்க்க இரண்டு காலேஜ் பெண்கள் வந்திருந்தார்கள். பவ்யமாகத்தான் வந்து நமஸ்காரம் பண்ணிவிட்டுப் போனார்கள். ஆனால் அவர்கள் புடைவை கட்டிக் கொள்ளாமல் புருஷர்களின் பைஜாமா-ஜிப்பா மாதிரியே போட்டுக்கொண்டிருந்ததுதான் எனக்கு என்னவோ போல் இருந்தது. N.C.C மாதிரி ஏதாவது பயிற்சி முகாமுக்காக இங்கே (காஞ்சீபுரத்துக்கு) வந்துவிட்டு, அப்படியே அந்த ட்ரெஸ்ஸிலேயே என்னைப் பார்க்க வந்திருப்பார்கள் போலிருக்கிறது என்றுதான் நினைத்தேன். அப்புறந்தான் தெரிந்தது – N.C.C  யும் இல்லை, ஒன்றும் இல்லை; இப்போது இந்த ட்ரெஸ்தான் கல்யாணம் ஆகிற வரையில் இளம் பெண்களின் ட் ரெஸ்ஸாக ஆகிக்கொண்டு வருகிறது என்று, தாவணி வழக்கமும் போய்க் கொண்டிருக்கிறது என்றும் தெரிந்தது, எனக்குப் பெரிய ‘ஷாக்’.
ஏன் ‘ஷாக்’ என்றால், இந்த ஆடை விஷயத்தில் நம்முடைய தேசத்துக்கு என்று
Esayanur Paati Post
ஏற்பட்ட நாகரிக முறையை, ‘ட்ரெடிஷ’னை ஸ்த்ரீகள்தான் இதுவரை விடாமல் காப்பாற்றிக் கொடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.  நாலு தலைமுறைக்கு முன்னாலிருந்தே புருஷர்கள் வெள்ளைக்கார உடுப்புப் போட்டுக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் ஸ்த்ரீகள் அப்படிப் போகவில்லை, ஃபோட்டோக்களில் புருஷன் ஸூட்-கோட் போட்டுக் கொண்டிருந்தபோதிலும், பக்கத்தில் நிற்கிற பெண்டாட்டி கொசுவன் புடவை, அல்லது தங்கள் ஜாதிக்கான புடவைதான் கட்டிக்கொண்டு நிற்பதாகப் பார்த்திருக்கிறேன்.
இப்போது நடக்கிற அளவுக்கு இல்லாவிட்டாலும் ஸ்த்ரீகள் காலேஜ் படிப்பது, உத்யோகம் பார்ப்பது, வேறே பல துறைகளில் ஈடுபடுவது, அன்நிய தேசங்களுக்குப் போய்வருவது ஆகியன எல்லாம் முன்னேயும்தான் இருந்திருக்கிறது. கார் ட்ரைவ் பண்ணுவது, ஸைக்கிள் ஒட்டுவது எல்லாமும் கூட ரொம்ப நாளாகவே – அபூர்வமாகத்தான் என்றாலும் – ஸ்த்ரீகளும் பண்ணிக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள். இப்படிப் பல தினுஸில் வியாபகமாகப் போனாலும் அப்போதும் புடைவை கட்டிக் கொள்கிற பழக்கத்தை விடவில்லை. நர்ஸ்கள்தான் விதிவிலக்கு. அதுவும் ஆஸ்பத்திச் சட்டத்துக்காகவே தவிர அவர்களாகப் ப்ரியப்பட்டுச் செய்ததில்லை.
புருஷர்கள் விஷயம் தேசத்துக்கு ஸ்வதந்தரம் வந்த பிற்பாடு, நாளாக  ஆக, முன்னைவிட வெள்ளைக்கார மோஸ்தரில் போவதாக ஆகிவந்திருக்கிறது. வெள்ளைக்காரன் ஆட்சியில் வேஷ்டி கட்டிக் கொண்டிருந்தவர்கள்கூட, அவனிடமிருந்து விடுதலை பெற்றபின் அவனுடைய ட்ரெஸ்ஸை மாட்டிக்கொள்ள ஆரம்பித்து அப்படியே போய்ப்  போய், வெளி அலுவலின்போது மட்டுமே இங்க்லீஷ் ட்ரெஸ் என்பதுபோய் வீட்டிலுமே கூட அதுதான்; இல்லாவிட்டால் துருக்கன் பாணியில் கைலி-லுங்கி என்று ஆகியிருக்கிறது. இத்தனை பெரிய புராதனமான நாகரிக தேசத்துக்கு, அதற்கென ஒரு தேசிய உடை – National Dress – இல்லாமல், பிறத்தியான் உடுப்பே நமக்கு உடுப்பாயிருப்பது நமக்கு மானக் குறைவு. ஸ்த்ரீகள்தான் இந்த குறைக்கு இடம் தராமல், ஸ்வதந்திரம் வந்து பல வருஷமாகிற மட்டும் பழைய முறையிலேயே உடுத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள். அது பெரிய ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் இருந்தது. இப்போது அதற்கும் உலை வைத்தாகிவிட்டது என்கிறபோதுதான் பெரிய ஷாக்காக அடித்துவிட்டது.
நான் ஸ்வாமிகளானதிலிருந்து எத்தனையோ தடவை ஷாக்கிங் ஸமாசாரங்கள் கேட்டிருக்கிறேன். அந்த எல்லாவற்றையும் சேர்த்து வைத்து இந்த ‘ஷாக்’.
நான் ப்ரமாதமாக தர்மோத்தாரணம் பண்ணுவதாகப் பத்ரிகைகளெல்லாம் எழுதுகின்றன. வருஷா வருஷம் ஜயந்தி என்று அங்கங்கே உத்ஸவம் பண்ணி நான் எப்படி தர்மத்துக்கு மறுமலர்ச்சி உண்டாக்கியிருக்கிறேன் என்று ஸ்தோத்ரிக்கிறார்கள். எனக்கானால் இதெல்லாம் நான் செய்யத் தவறியதைக் குத்திக் காட்டுவதாகவே தோன்றுகிறது. ‘கிழக் கோட்டான் மாதிரி தொண்ணூறாவது ஜயந்தி வரை கொண்டாட்டம் அடிக்கிறாயே! ஜயந்தி கொண்டாடிக் கொள்ள உனக்கு என்ன ‘ரைட்’? மேலே மேலே ஒவ்வொரு வருஷமும் தர்மங்களை வாரி விட்டுக் கொண்டிருக்கிறாயே! நீ பட்டத்துக்கு வந்ததிலிருந்து ஸநாதன தர்மம் மேலும் மேலும் எவ்வளவு பங்கப்பட்டுக் கொண்டு வந்திருக்கிறது? ஜகத்குரு பட்டம் பெரிதாக சூட்டிக் கொண்டிருக்கிற உனக்கு ஜகத்தை தர்மத்தில் நிலை நிறுத்துகிற சக்தி – தபோ சக்தி, பக்தி சக்தி எதுவோ ஒன்று – கொஞ்சமாவது இருந்தால் இப்படி ஆகிக்கொண்டு  வந்திருக்குமா? இருப்பதைக் காப்பாற்றிக் கொடுக்கக்கூடத் துப்பு இல்லாமல் வருஷா வருஷம், நாளுக்கு நாள் தர்மங்களை வாரிக் கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறாய்?’ என்பதை எனக்கு சவுக்கடியாக ஞாபக மூட்டுவதாகத்தான் இந்த ஜயந்தி விழாக்கள், புகழ் மாலைகள் எல்லாம் இருக்கின்றன. (I think only our Periyava in this world would do a self-criticism like this!)
இப்படி நான் கண்ணெதிரில் கொள்ளை கொடுத்த தர்மங்களில் நம்முடைய ஸ்த்ரீகள் புடைவை வேண்டாமென்று தள்ளி, ஆண்பிள்ளை ட்ரெஸ் மாதிரி ஒன்றை மாட்டிக்கொள்ள ஆரம்பித்திருப்பதுதான் பெரிய கொள்ளையாக ‘ஷாக்’ அடித்தது.

Categories: Upanyasam
Tags: penmai

On line links


Radio button MODI GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES Radio button  

*Obtain:
1.  Birth Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1

2.  Caste Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4

3.  Tribe Certificate
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8

4.  Domicile Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5

5.  Driving Licence
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6

6.  Marriage Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=3

7.  Death Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=2

Apply for:
1.    PAN Card
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=15

2.     TAN Card
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=3

3.     Ration Card
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=7

4.     Passport
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=2

5.     Inclusion of name in the Electoral Rolls
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=10

Register:   
1.    Land/Property
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=9

2.    Vehicle
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=13

3.    With State Employment Exchange
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=12

4.    As Employer
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=17

5.    Company
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=19

6.    .IN Domain
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=18

7.    GOV.IN Domain
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=25


Check/Track: 
1.    Waiting list status for Central Government Housing
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=9

2.     Status of Stolen Vehicles
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=1

3.    Land Records
http://www.india.gov.in/landrecords/index.php

4.    Cause list of Indian Courts
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=7

5.    Court Judgments (JUDIS )
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=24

6.    Daily Court Orders/Case Status
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=21

7.    Acts of Indian Parliament
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=13

8.    Exam Results
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=16

9.    Speed Post Status
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=10

10. Agricultural Market Prices Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=6

Book/File/Lodge: 
1.     Train Tickets Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=5

2.     Air Tickets Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=4

3.     Income Tax Returns
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=12

4.     Complaint with Central Vigilance Commission (CVC)
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=14

Contribute to: 
1.      Prime Minister's Relief Fund
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=11

Others: 
1.      Send Letters Electronically
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=20

Global Navigation   
1.     Citizens
http://www.india.gov.in/citizen.php

2.     Business (External website that opens in a new window)
http://business.gov.in/

3.     Overseas
http://www.india.gov.in/overseas.php

4.     Government
http://www.india.gov.in/govtphp

5.     Know India
http://www.india.gov.in/knowindia.php

6.     Sectors
http://www.india.gov.in/sector.php

7.     Directories
http://www.india.gov.in/directories.php

8.     Documents
http://www.india.gov.in/documents.php

9.     Forms
http://www.india.gov.in/forms/forms.php

10.    Acts
http://www.india.gov.in/govt/acts.  Rules
http://www.india.gov.in/govt/rules.php