Sunday, 25 October 2015

ஆசிரியரை பார்த்து மாணவன் ஒருவன் ஐயா நீங்கள் இறைவனை காணலாம் என்கிறீர்கள். என் எதிரில் இறைவனைக் காட்டுங்கள் அப்பொழுதுதான் நான் நம்புவேன் என்றான்.

என்னுடன் வா உனக்குக் காட்டுகிறேன் என்ற ஆசிரியர் தன்னுடன் அவனை அழைத்துச் சென்றார்.


ஆற்றங்கரையை  அடைந்த இருவரும் நீரில் இறங்கினார்கள். திடீரென்று அவர் மாணவனுடைய தலையை நீருக்குள் அமிழ்த்தினார். மூச்சுத் திணறிய அவன் துடிதுடித்தான். சில வினாடிகள் சென்றதும் அவர் அவனை விட்டார்.




நீருக்கு மேலே வந்த அவன் பரபரப்புடன் மூச்சை இழுத்துவிட்டான்.

எப்படி இருந்தது? என்று கேட்டார் அவர்.


மூச்சுவிட வேண்டும் என்று நான் துடிதுடித்துவிட்டேன் என்றான் அவன்.

நீருக்குள் இருந்தபோது முச்சுவிட எப்படி துடித்தாயோ அப்படிப்பட்ட உயிர்துடிப்பு இறைவனைக் காணவேண்டும் என்று உன்னுள் எழ வேண்டும். அப்படி எழுந்தால் நீயும் இறைவனைக்காணலாம் என்றார் அவர்.


Thursday, 18 June 2015

பண்டரி யாத்ரா

பண்டரிபுரம் சென்ற நாங்கள் ஜூன் 12 ,2015 இரவு 8 to 10 ரெங்க 
மண்டபத்தில் பஜனை செய்ய online லே அனுமதி வாங்கியிருந்தோம் .                                                                                                    
அதன்படி ஸ்ரீ ராமமூர்த்தி பாகவதர் மற்றும் ஸ்ரீ ராதாகிருஷ்ண பாகவதர் முன்னின்று வாத்திய கோஷ்டி சகிதம் பஜனை இனிதே நடந்தது . அதற்கு பின் விட்டலனை தரிசித்து தங்கும் இடம் வரும் நேரம் எல்லம்மா என்ற மாம்பாக்கம் கிராம ஸ்த்ரி தெரியாமல் ஒரு நாய் மேல் கால் வைத்துவிட அது அவரை கடிக்க அந்த நேரம் மருத்துவ உதவி கிடைக்காமல் மஞ்சள் தூள் வைத்து தற்காலிக சிகிச்சை செய்யப்பட்டது .பொதுவாக மகாராஷ்டிராவில் டாக்டரை காலை  11 மணிக்குதான் பார்க்க முடியும் .மேலும் கூட வந்தவர்களில் யாருக்கும் மராட்டி தெரியாததால் என்னிடம் அந்த பணி ஒப்படைக்கப்பட்டது.கிட்டத்தட்ட ஒரு ரெண்டு மணி நேரம் அலைந்து ஒரு டாக்டரை கண்டுபிடித்து அவருக்கு தடுப்பூசி போட்டு தங்கி இருந்த இடம் அழைத்து வந்தேன் .கிராமத்து மக்கள் வாழ்த்தினர்.

Monday, 1 June 2015

பால்ய விவாஹ காலத்தில் பெண்கள் தப்பிப் போவதற்கு ரொம்பவும் 

குறைச்சலாகதான் chance இருந்தது. ஒரு பெண்ணுக்குத் தாம்பத்ய 

எண்ணம் வருகிறபோதே அவளுக்குப் பதி என்ற ஒருத்தன் 
இருந்துவிட்டதால், அவனிடம் மட்டுமே 

அவளுடைய மனஸ் போயிற்று. இந்த எண்ணம் ஏற்பட்ட வயஸுக்கப்புறமும் 

கலியாணமாகாமல் இருப்பது என்று ஏற்பட்டால், அப்போது மனஸ் பல
 தினுஸாகப் 

போகிறது; சித்த விகாரம் ஏற்படுகிறது. ஆனால் இப்படி சாரதாச் சட்டத்திலிருந்து 

ராஜாங்க ரீதியாகவே ஏற்பட்டு விட்டதால், எங்கள் கையைக் கட்டி போட்டுவிட்ட 

மாதிரிதான் ஆகிவிட்டது. ஆனாலும் நினைத்து நினைத்து எத்தனையோ 
சட்டங்களை 

மாற்றுகிற மாதிரி, இதையும் மாற்றுவதற்கு அவர்களை (ஸர்க்காரை)த் 
தூண்டிவிடுகிற 

ரீதியில் public opinion-‍ஐ create பண்ண [வெகு ஜன அபிப்ராயத்தை உண்டு பண்ணி] 

முடியுமா என்பதால்தான், இந்த விஷயத்தில் நான் முழுக்கக் கை கழுவாமல் எடுத்துச் 

சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் பெண்களுடைய மனோபாவம், பெண்ணைப் 

பெற்றவர்களுடைய மனோபாவம் எல்லாமே இப்போது விபரீதமாக மாறி, 

கல்யாணத்துக்கு முயற்சி பண்ணாமல் காலேஜில் co-education முறையில் [ஆண் 

மாணவர்களோடு கூட்டுப் படிப்பு] படிப்பது, அப்புறம் புருஷர்களோடு உத்யோகம் 

பண்ணுவது என்றெல்லாம் ஆகி வருகிறதைப் பார்க்கிற போது, உள்ளுக்குள்ளே ரத்தக் 

கண்ணீர் விட்டுக் கொள்வதைத் தவிர, ஏதாவது பண்ணமுடியுமா என்று நம்பிக்கை 

போய்க் கொண்டுதான் இருக்கிறது.( மகாபெரியவா " தெய்வத்தின் குரல்") 





Wednesday, 25 February 2015

அண்ணா நகர் டவர் பார்க் ;அந்தி சாயும் நேரம்

அறுபத்துஎட்டு வயசுப்பாட்டி மடிசார் புடவையில்
"என்ன காமுப்பாட்டி சௌக்கியமா ? என்னை
தெரியறதோ ?"
"சரியா தெரியல்லை நங்கநல்லூர் கோமு
மாதிரி இருக்கே ;கண்லே காட்ராக்ட்"

"இல்லை பாட்டி நங்கவரம் பாகீ ;எவ்ளோ வருஷம்
ஆச்சு பாத்து ;இங்கே எப்படி ?"

"ஆமாண்டி கிராமத்துலே எல்லாத்தையும் வித்து
பட்டணம் வந்து வருஷம் பாத்து ஆறது "




"நானும் U.S. போய் பன்னேண்டு வருஷம் ஆச்சு ;
மாமனார் தவறிட்டார் .இங்கே மச்சினர் ஆத்திலே
நேத்திக்கு சுபம் .அடுத்த வாரம் கிளம்பறேன் .இங்கே
தனியா உக்காந்துண்டு என்ன பண்றேள் ?"

"ஆமாண்டி ;இங்கே எதிர்க்க தான் ஆஹம். B.P.,Sugar
டாக்டர் வாக் போக சொன்னார் ;சாயங்காலம் செத்த
இப்படி போனா ஆறு மணிக்கு பக்கத்து ஐயப்பன்
கோயில் தர்சனம் பண்ணிண்டு போக சரியாயிருக்கும் ."

"பேரன் பேத்தி எல்லாம் ?"

"பேரன் ரெண்டு பெரும் U.S."பேத்திக்கு படிப்பு
போதலை "

"தாத்தா போன வருஷம் கணக்கை முடிச்சுண்டு
போய்ட்டார் .அவர் வச்சிண்டு இருந்த பெரிய ஆபீஸ்
ரூம் காலி ஆச்சு "

"சரி "

"அபி B.A. முடிச்சா .என்னமோ டிப்ளமா பண்ணா .என்னமோ
beauty parlour course,facial அப்படின்னு பண்ணா "

"ஹும்"

"இப்ப தாத்தாவோட ஆபீஸ் ரூம் பூரா ஏ.சி.பண்ணி
என்னவோ SPA வோ என்னவோ சொல்றாளே அது
ஆரம்பிச்சிருக்கா ; இந்த படி மேலே நின்னு பாரு பெரிய
போர்டு தெரியும் ;மொதல்லே இவளே பண்ணா ;
இப்ப ரெண்டு பொண்களை போட்ருக்கா "

"போன் லே appointment பிக்ஸ் பண்ணி ஸ்லாட்
குடுத்து பணம் வாங்கறதை இப்ப பாத்துகரா"

"அதில்லை பாட்டி ஆச்சாரமான சாஸ்திரி ஆத்து
குடும்பம் ;இப்ப ஆத்து உள்ளயே சலூன் னா?"

"என்ன பண்றதுடி ;இப்ப புழப்பை தேடி நீ கடல் தாண்டி
போலையா? ஏதோ இதெல்லாம் பாக்காமா அவர் போய்
சேர்ந்துட்டார் ;நேக்குதான் வேளைவல்லை "

"நான் வோண்ணா ரோட்டை கிராஸ் பண்ணி உடவா?"

"வாணான்டி ;இன்னிக்கு பண்ணிட்டா ஆச்சா ;நான்
பாத்துக்கறேன் ;அப்புறம் ஆத்துலே வந்து ஒரு காபி
சாப்ட்டு போடி "

Thursday, 20 November 2014

ஒரு சமயம் பக்தர் ஒருவர், காஞ்சி ஸ்ரீமகாபெரியவாளை நமஸ்கரித்து கண்ணீர் பெருக நின்றார். பெரியவா அவரைப் பார்த்து, என்ன ரொம்ப வலிக்கிறதா?” என்று கருணையுடன் கேட்டார். பிறகு, கீழ்க்கண்ட ஸ்லோகத்தை எழுதிக் கொள்ளச் சொல்லி, தினமும் நூற்றி எட்டு தடவை இதைச் சொல், கவலைப்படாதே” என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.
அஸ்மின் ப்ராத்மன் நனுபாத்மா கல்பே
த்வமித்தம் உத்தாபித பத்மயோனி
அநந்தபூமா மம ரோகராசிம்
நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ
- ஸ்ரீமத் நாராயணீயம்
பொருள்: பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீகுருவாயூரப்பா! பாத்ம கல்பத்தில் பிரம்மதேவனைத் தோற்றுவித்தவனும், அளவற்ற மகிமையுடையவனுமான நீ, எனது எல்லா வியாதிகளையும் நீக்கி ஆரோக்கியம் அருள வேண்டும்.
ஆறு மாதங்கள் கழித்து, அந்த பக்தர் மீண்டும் கண்ணீர் மல்க, பெரியவாளை தரிசித்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
நன்னாயிட்டியே” என்றார், அந்தக் கலியுக தெய்வம். அந்த பக்தர், ஆமாம் நன்னாயிட்டேன். மருந்து எதுவும் வேண்டாம் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்” என்றார் அவர்.
அந்த பக்தருக்கு வந்திருந்தது புற்று நோய். பகவானை நம்பி பிரார்த்தித்தால், நிச்சயம் பலனுண்டு என்பதை, இதன் மூலம் மீண்டும் நமக்கு உணர்த்தியிருக்கிறார் மகா பெரியவர்.
நான் இந்த ஸ்லோகத்தை எழுதி, எனக்குத் தெரிந்த யாருக்கேனும் (இப்போதுதான் இந்த நோய் அதிகமாகக் காணப்படுகிறதே) புற்றுநோய் என்று தெரிந்தால், அவர்களுக்குக் கொடுத்து, 
பெரியவா சொன்னதைக் கூறுகிறேன்.
- கலா மூர்த்தி, சென்னை
நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்) நன்றி மகேஷ் .

Saturday, 8 November 2014


பதிவு செய்த நாள்

09நவ
2014 
00:00
நவ.,11 - கருடசேவை

மயிலாடுதுறையிலுள்ள திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவில், பெருமாளின் ௧௦௮ புண்ணிய திருத்தலங்களில் ஒன்று. இங்கு நடக்கும் கருடசேவை மிகவும் விசேஷம்.
பிரம்மாவிடமிருந்து வேதங்களை திருடி சென்ற மது, கைடபர்களை அழித்த மகாவிஷ்ணு, அவற்றை மீட்டு பரிமளம் (புனிதமாக்குதல்) ஆக்கினார். இதனால், இவர், பரிமள ரங்கநாதர் என்று பெயர் பெற்றார். 
தன் வாழ்க்கை துணைவியரை சரி வர கவனிக்காத காரணத்தால், தட்சனின் சாபத்திற்கு ஆளான சந்திரன், இங்கு சுவாமியை வழிபட்டு, விமோசனம் பெற்றான். சந்திரனுக்கு, 'இந்து' என்றொரு பெயரும் உண்டு. இதனால், இத்தலம், 'திரு இந்தளூர்' என்று பெயர் பெற்றது.
காவிரிக்கரையில் பெருமாள் சயனித்திருக்கும் ஐந்து தலங்கள், 'பஞ்சரங்கம்' எனப்படுகிறது. இதில் ஐந்தாவது தலமான இங்கு, 
பரிமள ரங்கநாதர் வீர சயனத்தில் காட்சி தருகிறார். வேதங்களுக்கு அருளியதால் இவருக்கு, 'வேதாமோதன்' என்றும் பெயருண்டு. இவரது சிலை மரகதக்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. சுவாமியின் தலைக்கு மேலே சூரியனும், நாபியில் பிரம்மாவும், பாதத்திற்கு அருகில் சந்திரனும், கங்காதேவியும், தலை அருகில் காவிரித்தாயும் உள்ளனர்; தாயார் பரிமள ரங்கநாயகி!
தன்னில் நீராடுபவர்களின் பாவத்தை ஏற்றுக்கொண்டதால், கங்கைக்கு அதிக பாவம் சேர்ந்தது. இதற்கு விமோசனம் கிடைக்க கங்காதேவி, இங்குள்ள காவிரி நதியில் மூழ்கி சுவாமியை வழிபட்டாள். கங்கையே தன் பாவத்தை தீர்க்குமளவுக்கு புண்ணியம் பெற்ற ஆறு காவிரி; இங்கே நீராடினால், புண்ணியம் பெருகும் என்பது ஐதீகம்.
ஐப்பசி மாதம், 22ம் தேதி முதல்(நவ.,8) இங்கு பிரம்மோற்சவம் துவங்கும். பத்து நாட்கள் நடக்கும் இந்த விழாவில், சுவாமிக்கு ஆண்டாள் அலங்காரம், குவலயாபீட வதம், பகாசுர வதம், அகல்யா சாப விமோசனம், காகாசுரன் வதம், உறியடி கோலக்காட்சிகள், வெண்ணெய்த்தாழி போன்ற அலங்காரங்களை செய்வர். 
விழாவின், 4ம் நாள் (நவ., 11) சுவாமி கருடசேவை சாதிப்பார்; இதைக் காண்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம். இதையடுத்து, நவ.,14ல் சுவாமிக்கு திருக்கல்யாணமும், 16ல் தேர்த்திருவிழாவும் நடக்கும்.
மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியன்று, ஸ்ரீரங்கத்தைப் போல, இங்கும் ரங்கநாதர் முத்தங்கியில் காட்சி தருவார். தை அமாவாசையன்று சுவாமிக்கு தாயார் போலவும், தாயாருக்கு சுவாமி போலவும் அலங்காரம் செய்வர்; இதை, 'மாற்றுத் திருக்கோலம்' என்பர்.
பரிமள ரங்கநாதரை வணங்கினால், புண்ணியம் பெருகும்; தரிசிக்க கிளம்புவோமா!
தொடர்புக்கு தொலைபேசி எண்: 04364 223 330.

நன்றி தினமலர் 
தி.செல்லப்பா

Tuesday, 28 October 2014

மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


106-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

 
 
 
 
 
 
1 Votes

அல்லாடி கிருஷ்ண சாமி ஐயர் மகன் டாக்டர் ராமகிருஷ்ணனும், அவரது மனைவி லலிதா ராமகிருஷ்ணனும் அமெரிக்கா செல்வதற்கு முன் காஞ்சிபுரம் மடத்திற்கு பெரியவரைக் காண வந்திருந்தனர். பெரியவரிடம், “வரும் 12ம்தேதி புறப்படறோம்.பெரியவாளின் அனுக்ரஹம் பூரணமாக வேணும்” என்று சொல்லி அந்த தம்பதிகள் வணங்கினர்.
பெரியவர் கண்ணை மூடிக் கொண்டு மவுனத்தில் ஆழ்ந்தார். “பதினைஞ்சு நாள் கழிச்சு புறப்படு” என்று கண்டிப்பான தொனியில் சொன்னார். டாக்டர் ராமகிருஷ்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. பயணத்தை தள்ளிப்போட இஷ்டமில்லை. பெரியவர் பேச்சை கேட்காமலும் இருக்கமுடியவில்லை. டிக்கட் கான்சலேஷன், அடுத்து ரிசர்வேஷன் எப்படி செய்வது? என்று மனக்குழப்பமும் உண்டானது. கடைசியில் அமெரிக்கப்பயணத்தை ஒத்தி வைத்தார்.
மீனம்பாக்கத்தில் இருந்து புறப்பட்ட விமானம் மும்பையிலேயே தன் பயணத்தை முடித்துக் கொண்டு விட்டது. அதில் பயணம் செய்த நூறு பேரும் இறந்துவிட்டனர். இதனைக் கேள்விப்பட்ட டாக்டர் அல்லாடி ராமகிருஷ்ணனும், அவரது மனைவி லலிதாவும் தாங்கள் பெரியவரால் காப்பாற்றப் பட்டதை எண்ணி ஆனந்தக்கண்ணீர் பெருக்கினர். வரவிருந்த துன்பத்தில் இருந்து காப்பாற்றியகாஞ்சிப்பெரியவரின் அருளாசியை வியந்து மகிழ்ந்தனர்.
ஸ்தோத்ரத்தைவிட, புகழ்ச்சியைவிட வசவு தான் எப்போதுமே ஒருவனுக்கு நல்லது செய்யும். புகழ்ச்சி, கர்வத்தில் கொண்டுவிட்டு ஆத்ம ஹானிக்குத்தான் வழி செய்கிறது. “சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறவர் மற்ற பேர்; அழ அழச் சொல்கிறவர் உற்ற பேர்” என்று சொல்வதுண்டு.
நன்றி பாலஹனுமன்